முகப்பு /மதுரை /

மதுரை காந்தி மியூசியத்தில் 5 நாள் அகிம்சை சந்தை, இயற்கை திருவிழா!

மதுரை காந்தி மியூசியத்தில் 5 நாள் அகிம்சை சந்தை, இயற்கை திருவிழா!

Madurai Gandhi museum fest | மதுரை காந்தி மியூசியத்தில் அகிம்சை இயற்கை திருவிழா இம்மாதம் 22ஆம் தேதி தொங்குகிறது. இதற்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை காந்தி மியூசியத்தில் அகிம்சை பொருளாதார கூட்டமைப்பு, காந்தி மியூசியம் மற்றும் செஸி நிறுவனம் சார்பில் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 26ஆம் வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை அகிம்சை சந்தை இயற்கை திருவிழா நடைபெறுகிறது.

இதில், உள்ளூர் வாழ்வாதாரம், கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் உணவக, விழிப்புணர்வு ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன. பிற மாநிலங்களைச் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் விளைபொருட்கள், மதிப்புகூட்டிய உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இயற்கை சாயமிடுதல், மாடித்தோட்டம், சிறுதானிய சமையல் விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். காலநிலை மாற்றம், இயற்கை விவசாயம், கிராமப்பொருளாதாரம், கைவினைப்பொருட்களின் மேம்பாடு குறித்து கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது.

இதையும் வாசிக்க: மதுரை திருமோகூர் காளமேக பெருமாள் கோயில் வரலாறும் சிறப்புகளும்..

20 விற்பனையகங்கள், 10 உணவு ஸ்டால்கள், 15 பயிற்சி பட்டறைகள், இயற்கை விவசாயம், உணவு, பாரம்பரியம் குறித்த பயிற்சி பட்டறை, பாரம்பரியம் மற்றும் இயற்கை உணவு குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகின்றன. அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்புக்கு 8939138207 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.

First published:

Tags: Agriculture, Food, Madurai