முகப்பு /மதுரை /

மதுரை வழியே செல்லும் 43 ரயில்கள் ரத்து- எந்தெந்த ரயில் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்...

மதுரை வழியே செல்லும் 43 ரயில்கள் ரத்து- எந்தெந்த ரயில் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Madurai | மதுரையில் நடைபெறும் ரயில் பாதை பணியின் காரணமாக 43 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை திருப்பரங்குன்றம் - திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதை பணி நடக்க உள்ளதால், 43 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில், ’கேரள மாநிலம் பாலக்காடு - திருச்செந்துார் அதிகாலை, 5:30 மணி ரயில்; ராமேஸ்வரம் - மதுரை அதிகாலை, 5:40 மணி முன்பதிவு இல்லாத ரயில், மதுரை - தேனி காலை, 8:05 மணி ரயில்; தேனி - மதுரை மாலை, 6:15 மணி ரயில்; மதுரை - செங்கோட்டை காலை, 11:30 மணி ரயில்; செங்கோட்டை - மதுரை காலை, 11:50 மணி முன்பதிவு இல்லாத ரயில் மார்ச் 1 முதல் 7ம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.

திருச்செந்துார் - பாலக்காடு மதியம், 12:05 மணி ரயில்; மதுரை - ராமேஸ்வரம் காலை, 6:50 மணி முன்பதிவு இல்லா ரயில்; மதுரை - ராமேஸ்வரம் மதியம், 12:30 மணி முன்பதிவு இல்லாத ரயில்; ராமேஸ்வரம் - மதுரை காலை 11:00 மணி ரயில்; மதுரை - ராமேஸ்வரம் மாலை 6:10 மணி ரயில், ராமேஸ்வரம் - மதுரை மாலை, 6:00 மணி ரயில்; திண்டுக்கல் - மதுரை காலை, 8:00 மணி ரயில்; மதுரை - திண்டுக்கல் மாலை, 6:10 மணி ரயில்; செங்கோட்டை - திருநெல்வேலி காலை, 10:05 மணி ரயில்; திருநெல்வேலி - செங்கோட்டை மதியம், 1:50 மணி முன்பதிவு இல்லாத ரயில்கள், மார்ச் 1 முதல், 6ம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன

சென்னை எழும்பூர் - காரைக்குடி மாலை, 3:45 மணி பல்லவன் விரைவு ரயிலும், எழும்பூர் - மதுரை இரவு, 10:05 வாராந்திர ரயிலும், மார்ச் 1 முதல் மார்ச், 3 வரை ரத்து செய்யப்படுகின்றன.

காரைக்குடி - எழும்பூர் காலை, 5:35 மணி பல்லவன் விரைவு ரயில் மார்ச், 1, 3, 4ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. கோவை - நாகர்கோவில் இரவு, 7:30 மணி விரைவு ரயில், வரும் 28ம் தேதி ரத்து செய்யப்படுகிறது

ஈரோடு - திருநெல்வேலி மதியம், 1:35 மணி ரயில்; ராமேஸ்வரம் - கன்னியாகுமரி இரவு 9:00 மணி ரயில்கள், மார்ச் 1, 4ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன. கன்னியாகுமரி - ராமேஸ்வரம் இரவு, 10:15 மணி ரயில், மார்ச் 2, 5ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

திருச்செந்துார் - திருநெல்வேலி காலை, 10:15 மணி சிறப்பு ரயில், திருநெல்வேலி - திருச்செந்துார் மாலை, 4:06 மணி சிறப்பு ரயில், நாகர்கோவில் - கோவை இரவு 9:45 மணி ரயில், மார்ச் 1, 2, 3ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

மதுரை - எழும்பூர் இரவு, 8:50 மணி ரயில்; ராமேஸ்வரம் - திருப்பதி மாலை, 4:20 மணி வாராந்திர ரயில் ஆகியவை, மார்ச் 2லும்; திருப்பதி - ராமேஸ்வரம் காலை, 11:55 மணி வாராந்திர ரயில் மார்ச், 3லும் ரத்து செய்யப்படுகின்றன.

சென்ட்ரல் - மதுரை இரவு, 10:30 மணி விரைவு ரயில், மார்ச் 1, 3ம் தேதிகளிலும்; மதுரை - சென்ட்ரல் இரவு, 10:50 மணி ரயில், மார்ச் 2, 5ம் தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன.

திருச்சி - திருவனந்தபுரம் காலை, 7:20 மணி ரயில்; திருவனந்தபுரம் - திருச்சி காலை 11:35 மணி ரயில் போன்றவை, மார்ச் 2, 3ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன.

கோவை - நாகர்கோவில் இரவு 7:30 மணி ரயில், எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - நாகர்கோவில் மாலை, 5:15 மணி ரயில், மார்ச் 1, 2ம் தேதிகளிலும்; திருநெல்வேலி - ஈரோடு காலை, 6:15 மணி ரயில், மார்ச் 2, 3, 4, 5ம் தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன.

நாகர்கோவில் - தாம்பரம் மாலை, 4:15 மணி வாராந்திர ரயில்; எழும்பூர் - நாகர்கோவில் மாலை, 6:55 மணி வாராந்திர ரயில், மார்ச் 2ம் தேதியிலும்; நாகர்கோவில் - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு இரவு, 7:15 மணி ரயில், மார்ச் 2, 3ம் தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன.

மதுரை மக்களே உஷார்.. இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

தாம்பரம் - நாகர்கோவில் இரவு, 7:30 மணி வாராந்திர ரயில், மார்ச் 1லும்; நாகர்கோவில் - எழும்பூர் மாலை, 4:15 மணி வாராந்திர ரயில், மார்ச் 3லும் ரத்து செய்யப்படுகின்றன.

மதுரை - கோவை காலை, 7:25 மணி ரயில்; மதுரை - விழுப்புரம் அதிகாலை 4:05 மணி ரயில், மார்ச், 6ல் ரத்து செய்யப்படுகின்றன.

First published:

Tags: Local News, Madurai