Home /madurai /

மதுரையில் பருத்தி சாகுபடிக்கு ரூ.43 லட்சம் மானியம் ஒதுக்கீடு

மதுரையில் பருத்தி சாகுபடிக்கு ரூ.43 லட்சம் மானியம் ஒதுக்கீடு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுரையில் திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டியில் 9,400 ஹெக்டேரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்திற்கு நீடித்த நிலையான பருத்தி இயக்கத்தின் கீழ் 43 லட்ச ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    வட்டார வேளாண் மையம் சார்பில் விவசாயிகளுக்கு உரங்கள் வாங்கவும், வேளாண் கருவிகள் வாங்கவும், சாகுபடிக்கும், ரசாயன தெளிப்புகளுக்கும் மானியங்கள் அவ்வபோது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அடர்நடவு, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம், சுற்றுச்சூழல் சார்ந்த ஆய்வு, பருத்தி மேலாண்மை, ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி தெளித்தல் ஆகியவற்றுக்கு தனித்தனியாக மானியம் வழங்கப்படுகிறது.

    மதுரையில் திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டியில் 9,400 ஹெக்டேரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    ஒரு ஹெக்டேருக்கு 4900 ரூபாய், ஊட்டச்சத்து மேலாண்மை உபகரணங்கள் வாங்க ஹெக்டேருக்கு 1400 ரூபாய் மானியம் வழங்கப்படும். அடர் நடவுக்கு 80 ஹெக்டேர் ஒதுக்கப்பட்டு உள்ளது. விரும்பும் விவசாயிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Madurai

    அடுத்த செய்தி