ஹோம் /மதுரை /

தேவர் ஜெயந்தி : மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்

தேவர் ஜெயந்தி : மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்

டாஸ்மாக்

டாஸ்மாக்

Madurai Tasmac : தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. அன்றையதினம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து ஏராளமானோர் வருகைபுரிவர்.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்க இருப்பதால் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Must Read : பொள்ளாச்சி ‘சூர்யவம்சம்’ வீட்டில் ஷூட் செய்யப்பட்டு மாபெரும் ஹிட்கொடுத்த படங்களின் லிஸ்ட்!

இந்நிலையில், அங்கே எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் இருக்க 144 தடை உத்தரவு, டாஸ்மாக் கடைகள் அடைப்பு உள்ளிட்ட சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தென் மாவட்ட ஆட்சியர்கள் எடுத்து வருகின்றனர். இதன்படி மதுரை மாவட்டத்தில் அக்டோபர் 30ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்படுகின்றன. இதற்கான உத்தரவு அனைத்துக் கடைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தேவர் ஜெயந்தி விழாவுக்கு மாவட்டங்களிலிருந்து மதுரை வழியாக வாகனங்கள் சென்று திரும்புவதால் மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Madurai, Muthuramalinga Thevar, Thevar Jayanthi