Home /madurai /

மதுரையில் 24 மணி நேரமும் இயங்கும் ரோஸ் மில்க் கடை - நள்ளிரவிலும் தேடிச் செல்லும் வாடிக்கையாளர்கள்..

மதுரையில் 24 மணி நேரமும் இயங்கும் ரோஸ் மில்க் கடை - நள்ளிரவிலும் தேடிச் செல்லும் வாடிக்கையாளர்கள்..

மதுரை

மதுரை - ரோஸ் மில்க் கடை

Madurai 24 hrs Rose Milk Shop | மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு அருகில் தற்போது புதிதாக அமைந்துவரும் வணிக வளாகத்திற்கு அருகாமையில் மேல வடம் போக்கி தெருவில் இந்த 24 மணி நேர ரோஸ்மில்க் கடையானது அமைந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai
மதுரையில் அனைவரும் அறிந்த, அனைவருக்கும் பிடித்த குளிர்பானம் எது என்று கேட்டால் கண்டிப்பாக அது ஜிகர்தண்டா என்று மட்டும் தான் பலரும் நினைத்து கொண்டிருப்பர்
ஆனால் ஜிகர்தண்டா மட்டும் மதுரையில் ஃபேமஸ் அல்ல!!
24 மணி நேரமும் ரோஸ் மில்க் மற்றும் பாதாம் பால் விற்கக்கூடிய இந்த லக்ஷ்மி கிருஷ்ணா பால் கடையும் மதுரையில் இன்றைக்கு இளைஞர்கள் மத்தியிலும் பிற மக்கள் மத்தியிலும் முத்திரை பதித்துள்ளது.

ஏறக்குறைய மதுரையின் பெரும்பாலான இளைஞர்கள் இவர்களது ரோஸ் மில்க் சுவைக்கு அடிமை என்றே கூறலாம்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள கடை தான் இந்த லக்ஷ்மி கிருஷ்ணா பால் பண்ணை
திருமங்கலத்தை அடுத்த தங்கலாச்சேரி என்ற கிராமத்தை சேர்ந்த திரு.ராம கிருஷ்ணன் இதனை தொடங்கி சுமார் 40 வருடங்களாக இந்த கடையை நடத்தி வருகிறார்.

இதையும் படிங்க:  நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மதுரை மாணவனின் பகிர்வு

அவர் பேசுகையில் 25 வருடங்களாக பால் வியாபாரம் மட்டுமே செய்து வந்ததாகவும் கடந்த 15 வருடங்களாக தான் ரோஸ் மில்க் வியாபாரம் செய்வதாகவும் தெரிவித்தார், மேலும் கடந்த ஐந்து வருடங்களாக மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து செல்வதாகவும் அதிலும் முக்கியமாக கல்லூரி இளைஞர்கள் அதிகம் ரோஸ் மில்க் அருந்தி செல்வதாகவும் தெரிவித்தார்.

24 மணி நேரமும் இந்த கடையை திறந்து வைத்திருப்பதற்கான காரணம் என்னவென்று நாம் கேட்ட பொழுது, இங்கு பால் வியாபாரம் 24 மணி நேரமும் நடக்கும் எனவே கடை 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்பதால் 24 மணி நேரமும் ரோஸ் மில்கையும் விற்பனை செய்து வருவதாக கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவர்களது கடையில் ரோஸ் மில்க் ₹30க்கும், பாதாம் பால் ₹40க்கும் விற்கப்படுகிறது. மேலும் பால், தயிர், பால் கோவா, பன்னீர் போன்ற உணவுகளும் இந்த கடையில் விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு அருகில் தற்போது புதிதாக அமைந்துவரும் வணிக வளாகத்திற்கு அருகாமையில் மேல வடம் போக்கி தெருவில் இந்த கடையானது அமைந்துள்ளது.

Madurai
மதுரை - ரோஸ் மில்க் கடை
Published by:Arun
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி