முகப்பு /செய்தி /மதுரை / மதுரையில் சட்ட விரோதமாக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த 2 பேர் கைது..!

மதுரையில் சட்ட விரோதமாக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த 2 பேர் கைது..!

சட்ட விரோதமாக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த 2 பேர் கைது..

சட்ட விரோதமாக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த 2 பேர் கைது..

Madurai | மதுரையில் சட்ட விரோதமாக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை தெப்பக்குளம் வைகை ஆற்றின் தென்பகுதி கரையோர சாலை பகுதியில் இன்று காலை தெப்பக்குளம் காவல்நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தனர்.

அப்போது, அந்த பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.  அவர்கள் முரணான தகவல்களை அளித்ததால் சோதனை செய்தனர். அப்போது ஒரு துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்கள் அவர்களிடம் இருப்பதை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அவர்களிடம் இருந்து உடனடியாக பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் சென்னை மேற்கு அண்ணா நகரை சேர்ந்த தனசேகர் (52) மற்றும் மதுரை கோமதிபுரம் ஆவின்நகர் பகுதியை சேர்ந்த சுபாஸ் (40) என்பதும் தெரிய வந்தது. இதில் முதற்கட்ட தகவலில் தனது நண்பர் ஒருவர் மூலமாக இந்த  துப்பாக்கியை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

Also see... மனோபாலா போல யாரும் வத்தக்குழம்பு வைக்க மாட்டார்கள் - மன்சூர் அலிகான் உருக்கம்

top videos

    இந்த நிலையில் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தெப்பக்குளம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    First published:

    Tags: Crime News, Gun, Madurai