மதுரை மாநகரத்தை பழமையான நகரம் என்று சொல்லக்கூடிய வகையில் மதுரையில் பழமையான இடங்களும், பழமையான கடைகளும் தற்பொழுது வரை இயங்கிக் கொண்டுதான் வருகிறது. அதில் மிகவும் பிரபலமான பழமையானக் கடைகளில் ஒன்றுதான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செல்லும் வழியில் இருக்கக்கூடிய மாலை கோனார் சந்தனக் கடை. இந்த கடையானது ஐந்து தலைமுறையாக அதாவது 150 வருடங்களாக இயங்கி வருகின்றது.
முதன்முதலாக இந்த கடை மீனாட்சி அம்மன் கோவில் இந்தியன் பேங்க் அருகில் இருந்ததாகவும் பின்பு இந்தப் பகுதிக்கு மாற்றப்பட்டு மாலை கோனார் வாசனைத் திரவியம் சாலை என்று இந்த பகுதியில் உள்ள சாலைக்குப் பெயரும் வைக்கப்பட்டது. பின்பு காலப்போக்கில் மாறிவிட்டதாம்.
சாமி மீது அதிக பக்திக் கொண்டதால் சாமி பொருட்களான சந்தனம், குங்குமம், பன்னீர் போன்றப் பொருட்கள் விற்றதாகவும், அதுபோக அந்த காலத்தில் வெளிநாடுகளில் இருந்து அத்தர் கொண்டுவரப்பட்டு அதிகமாக விற்பனைச் செய்யப்பட்டதால் அந்த காலத்திலேயே இந்த கடைக்கு பிரான்சில் உள்ள நெப்போலியன் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.
தற்பொழுது வரை இந்த கடையில் அந்த காலத்தில் எவ்வாறு சந்தனம் தயாரிக்கப்பட்டதோ அந்த முறையிலேயே தற்போது வரை அதாவது இவர்களே சந்தனம் தயாரித்து அதில் சில வாசனை திரவியங்கள் கலந்துப் பழமை மாறாமல் தற்பொழுது வரை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுபோக குங்குமம், பன்னீர் போன்ற பூஜைக்கு தேவைப்படும் பொருட்களை நல்ல தரமான கம்பெனியில் இருந்து வாங்கி விற்பனை செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கடையின் ஐ லைட் என்னவென்று பார்த்தால் இவர்கள் சந்தனத்தில் கலக்கும் மூன்று வகையான வாசனை திரவியம் தான் இந்த சந்தனத்தின் தனித்தன்மையாக இருக்கின்றது.
இதனால் இந்த சந்தனத்தை வாங்குவதற்கு எனவே ஒரு மக்கள் கூட்டம் தற்பொழுது வரை இருந்து கொண்டுதான் இருக்கின்றது. மதுரை மக்களுக்கு ஒரு நல்ல விஷயத்திலிருந்து கோவில் திருவிழா வரை அதாவது சித்திரை திருவிழா கொண்டாட்டத்திற்கு கூட பக்தர்கள் அனைவரும் இந்த கடையில் வந்துதான் சந்தனத்தை வாங்கிக் கொண்டு செல்வார்கள்.
இதையும் படிங்க : கம்பம் டூ தென்கொரியா.. தேனி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் காவலர்..
ஏனென்றால் ஒரு நல்ல காரியம் நடந்தால் இந்த சந்தனத்தை வாங்கிக் கொண்டு சென்றால் நல்லதாகவே நடக்கும் என்பது மக்களின் அபிப்பிராயமாக இருப்பதால் இங்கு வந்துதான் சந்தனத்தை வாங்கி தனது காரியங்களை தொடங்குவார்களாம்.
இதுபோக இந்த கடையில் இருந்துதான் மதுரையில் மிகவும் பழமையான மற்றும் ஃபேமஸான கோவில்களான மீனாட்சி அம்மன் கோவில், மதுரை தல்லாகுளம் வெங்கடாசலபதி பெருமாள் கோவில், அழகர் கோவில் போன்றப் பல்வேறு கோவில்களுக்கு இவர்கள் தயாரிக்கும் சந்தனம்தான் அபிஷேகத்திலிருந்து கோவிலின் பல்வேறு பூஜைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இந்தக் கடையின் பெயர் அதாவது மாலை கோனார் சந்தன கடை என்ற இந்த பெயர் பல்வேறு படங்களில் உள்ள பாடல்களில் வந்துள்ளதாம். உதாரணத்திற்கு நடிகர் கார்த்தி நடித்த பருத்திவீரன் படத்தில் "வந்தனம்மா வந்தனம் வந்தா சனம் எல்லாம் குந்தனம் வரும்பொழுது வாங்கி வந்தேன் மாலை கோனார் சந்தனம்...." என்ற பாடலிலும் அதே போல் காதல், ஜிகர்தண்டா மற்றும் அந்த காலத்து சுவாமி வர்ணிப்பு பாடல்களிலும் இந்த கடையின் பெயர் பாடப்பெற்று வந்துள்ளது. சினிமாத் துறையிலும் இந்த கடைப் பெயர் போனது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அத்தனைச் சிறப்புகளைக் கொண்ட இந்த கடையானது தற்பொழுது வரை அந்த காலத்தில் எப்படி இருந்ததோ அதேபோல் பழமை மாறாமலும் உள்ளது. இன்னும் சொல்ல போனால் 150 வருடங்களுக்கு முன்பு இவர்களின் பாட்டனார் வாங்கி வைத்த 3 பொம்மைகள் கூட அதே இடத்தில் அதே மாதிரி தற்பொழுது வரை வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த பொம்மையானது மக்களின் பார்வையில் "அந்த 3 பொம்மைகள் இருக்குமே அந்த சந்தன கடை" என்று சொல்லும் அளவிற்கு இங்குள்ள பொம்மைகள் பெயர் போனதாக இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai