முகப்பு /மதுரை /

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை.. பக்தர்கள் பரவசம்!

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை.. பக்தர்கள் பரவசம்!

X
விளக்கு

விளக்கு பூஜை

Madurai mariyamman temple | மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தின் பங்குனி திருவிழாவின் மூன்றாவது நாளில் 1008 விளக்கு பூஜை நடைபெற்றது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் பாரம்பரியமான,கலைநயம் மிக்க, வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் உள்ளன.அதில் மிகவும் புகழ் பெற்ற விளங்குகிறதுமதுரை மீனாட்சி அம்மன் கோவில், இதன்உப கோவிலான வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் திருக்கோவில்.

இந்த கோவிலில் உள்ள அம்மன் ஊரில் எல்லை தெய்வமாக கருதப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இந்த கோவையின் பங்குனி மாதத்தில் நடைபெறும் பங்குனி திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது. இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவை முன்னிட்டு அம்மன் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகன மயில் வாகனம் போன்ற வாகனங்களில்எழுந்தருளையும் அம்மனை காண வரும் பக்தர்கள் காப்பு கட்டி தீச்சட்டி எடுத்து திருவிளக்கு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் பங்குனி திருவிழாவின் மூன்றாவது நாள் நீங்கள் குழந்தை பாக்கியம் பெற, திருமணத்தடை நீங்க நீண்ட ஆண்டு மாங்கல்யம் பெற போன்ற வேண்டுதலிற்காக சுமார் 1008 பெண்கள் இணைந்து குத்து விளக்கேற்றி மந்திரங்கள் சொல்லி கோவில் மற்றும் கோவிலின் வளாகம் முழுவதும் திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றன.

இந்நிகழ்வு நிறைவு பெற்ற பிறகு, வெள்ளை யானை வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் கையில் தம்புராவுடன் கொட்டடித்து தெப்பக்குளம் முழுவதும் சுற்றி வலம் வந்து, பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். இந்நிகழ்வை காண்பதற்காக அப்பாகுதியில் திரளான பக்தர்கள் வந்து தரிசித்து சென்றனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Madurai