Home /madurai /

வடிவேலு மட்டுமில்லிங்க பிரபல காமெடி நடிகர்களான இந்த 10 பேரும் மதுரைகாரங்கதான்

வடிவேலு மட்டுமில்லிங்க பிரபல காமெடி நடிகர்களான இந்த 10 பேரும் மதுரைகாரங்கதான்

காமெடி நடிகர்கள்

காமெடி நடிகர்கள்

தமிழ் திரைப்படங்களில் நடித்து மக்களை சிரிக்கவைத்து கலக்கிய மதுரையைச் சேர்ந்த பத்து நகைச்சுவை நடிகர்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Madurai, India
வடிவேலு :

காமெடி நடிகர் என்றதும் நம் நினைவுக்கு முதலில் வருபவர், மதுரையில் பிறந்த வைகைப்புயல் வடிவேலுதாங்க. இவர் தனது அசாத்திய நடிப்பாலும், திறமையாலும் மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர். வாழ்வின் அத்தனை நிகழ்ச்சிகளிலும் நினைவுக்கு வரும் அளவிற்கு ஏராளமான நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

வடிவேலு


இவர் இல்லாத மீம்ஸ்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஊற்றுக்கண்ணாய் இருந்து வருபவர். ‘இப்பவே கண்ண கட்டுதே’; ‘நான் அப்படியே சாக் ஆயிட்டேன்’; ‘சண்டையில கிழியாத சட்ட எங்கருக்கு’; ’என்ன... சின்ன புள்ளத் தனமா இருக்கு’ போன்ற இவருடைய ஏராளமான வசனங்கள் மிகவும் பிரபலமானவை.

சிங்கமுத்து:

நடிகர் வடிவேலுவுடன் பெரும்பாலான திரைப்படங்களில் ஒன்றாக நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் மதுரை திருமங்கலத்தில் பிறந்த சிங்கமுத்து.

சிங்கமுத்து


பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இணைந்து நடிப்பதில்லை. இருவரும் சேர்ந்து கலக்கிய நகைச்சுவை காட்சிகள் மிகவும் பிரபலமானவை.

சூரி :

நடிகர் சூரி, வெண்ணிலா கபடிகுழு படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்ளும் காட்சியில் நடித்துப் பிரபலமானதால் ‘பரோட்டா சூரி’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகிறார். அந்த படத்தில் ‘எல்லா கோட்டையும் அழிங்க..

சூரி


முதல்ல இருந்து சாப்பிடுறேன்’ என்ற வசனம் மிகவும் பிரபலமானது. இவர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து வருகிறார். இவரும் மதுரையைச் சேர்ந்தவர்தாங்க.

ரோபோ சங்கர்:

விஜய் டிவியில் ‘கலக்கப் போவது யாரு?’ நிகழ்ச்சியில் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாகவும் சிரிப்பூட்டும் வசனங்கள் மூலமாகவும் பரவலாக அறியப்பட்டவர் ரோபோ சங்கர்.

ரோபோ சங்கர்


இவர், தீபாவளி, மாரி உள்ளிட்ட பல திரைபடங்களில் நடத்துள்ளார். இவரின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் எரியூர் என்றாலும், இவர் படித்து வளர்ந்ததெல்லாம் மதுரையில்தான்.

மதுரை முத்து:

இவரின் பெயரிலேயே இருக்கிறது மதுரை. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டத்தில் உள்ள டி.அரசபட்டி என்ற ஊரில் பிறந்தவர்தான் மதுரை முத்து, நகைச்சுவை பேச்சால் மிகவும் பிரபலமானவர். விஜய் டிவி ஷோ மூலம் பிரபலமானவர்களில் இவரும் ஒருவர்.

மதுரை முத்து


‘கலக்கப் போவது யாரு’, ‘அசத்தப் போவது யாரு’, ‘காமெடி ஜங்சன்’ போன்ற டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர். பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார். இவர் ‘மதுரை வீரன், ‘குற்றம் குற்றமே’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ராமர்:

லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களின் ‘என்னா மா இப்படி பணீறீங்களே மா’ என்ற சீரியஷான வசனத்தை ராமர் அவருடைய ஸ்டைலில் ‘என்னா மா இப்படி பணீறீங்களே மா’ என்ற கிண்டலான பேச்சு மிகவும் பிரபலமானது.

ராமர்


மதுரைக்கு அருகில் உள்ள மேலூர்தான் ராமரின் சொந்த ஊர். நகைச்சுவை நடிரான ராமர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக அறிமுகமாகி பிரபலமானவர். இவர், ‘எதற்கும் துணிந்தவன்’, பன்னிகுட்டி, ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ போன்ற படங்களில் நடத்துள்ளார்.

அல்வா வாசு :

சுமார் 900 திரைப்படங்களில் நடித்த காமெடி நடிகர் வாசு, அமைதிப்படை திரைப்படத்தில் மயக்க மருந்து கலந்த அல்வா வாங்கி வரும் கதாபாத்திரத்தில் நடித்ததால் ‘அல்வா வாசு’ என்று அழைக்கப்பட்டார்.

அல்வா வாசு


இவர் நடிகர் வடிவேலுவுடன் நடித்த காமெடி காட்சிகள் மிகவும் பிரபலமானவை. மதுரையைச் சேர்ந்த இவர் 2017ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் நகைச்சுவையை நம்மிடம் விட்டுவிட்டு மறைந்தார்.

பாண்டி (பிளாக் பாண்டி) :

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் பிளாக் பாண்டி என்று அழைக்கப்படுபவர் பாண்டி. இவரின் இயற்பெபயர் லிங்கேஷ்வரன்.

பாண்டி


இவர், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, கில்லி, ஆட்டோகிராப், தீக்குச்சி, அங்காடி தெரு, சாட்டை, தெய்வத்திருமகள் போன்ற பல படங்களில் தனது காமெடி நடிப்பை வெளிப்படுத்தி சிரிக்க வைத்தவர். இவருடைய சொந்த ஊரும் மதுரைதாங்க.

கருப்பு சுப்பையா:

பிரபல நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி, செந்திலுடன் பல படங்களில் நடித்த காமெடி நடிகர் கருப்பு சுப்பையா. இவர் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் மற்றும் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்தவர்.

கருப்பு சுப்பையா


இவருக்கு கவுண்டமணி ஈயம் பூசும் காமெடி மிகவும் பிரபலமானது. இந்த கருப்பு சுப்பையாவுக்கு மதுரை திருமங்கலம்தான் சொந்த ஊர்.

உசிலைமணி :

மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் பிரபல நகைச்சுவை நடிகர் உசிலைமணி. இவர் சுமார் 1000 படங்களுக்குமேல் நடித்தவர். மேடை நாடகங்களிலும் நடித்து புகழ்பெற்றர். இவரின் பிரபலமான வசனமான ‘பேஷ் ... பேஷ் ... ரொம்ப நன்லாருக்கு’ என்ற நரசுஸ் காபி விளம்பரம் 80 மற்றும் 90 களில் மிகவும் பிரபலம்.

உசிலை மணி


ரஜினி நடிப்பில் வெளியான பணக்காரன் படத்தில் வரும் ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்’ என்ற பாடலில் வரும் ‘உசிலமணியாட்டம் ஒடம்பத்தாம் பாரு’ என்ற வரி இவரின் தோற்றத்தை கொண்டு எழுதப்பட்ட வரிகள்தான்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி