விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் கிராம தலையாரியாக மாரியப்பன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ராஜபாளையம் பாரத ஸ்டேட் வங்கி முன்பு வண்டியை நிறுத்திச் சென்றுவிட்டு வங்கியிலிருந்து ரூ. 3.50 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு திரும்பி வந்து இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்டிக்குள் வைத்துவிட்டு அருகே இருந்த டீக்கடைக்கு சென்றுவிட்டார்.
டீ குடித்து விட்டு 10 நிமிடங்கள் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது பெட்டியில் இருந்த ரூ.3- லட்சத்தை காணவில்லை. ரூ.50,000- உள்ள ஒரே ரூபாய் கட்டு மட்டும் உள்ளே கிடந்தது. பல இடங்களில் தேடிப் பார்த்தும் பணம் கிடைக்கவில்லை. உடனடியாக இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் மாரியப்பன் புகார் செய்தார்.
தகவல் கிடைத்தவுடன் தெற்கு குற்றப்பிரிவு போலீசார் விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார். அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது 5 நபர்கள் இதில் கூட்டாகச் சேர்ந்து செய்திருப்பது தெரியவந்துள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.