Home /local-news /

விழுப்புரம் மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகள்.!

விழுப்புரம் மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகள்.!

Today's news collection of Villupuram District

Today's news collection of Villupuram District

விழுப்புரம் மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகள்

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கூட்டத்தின் ஆலோசனைக்கூட்டம்

    விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் 2021–22-ம் ஆண்டில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 136 ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தற்போது, 2022–23ம் ஆண்டில் 143 ஊராட்சிகளில் இத்திட்டத்ததை செயல்படுத்தும் வகையில் அலுவலர்கள் திட்டமிட்டு விரைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    50 யூனிட் மணல் குவியலை வருவாய் துறையினர் பறிமுதல்

    விழுப்புரம் அருகே நிலத்தில் பதுக்கி வைத்திருந்த 50 யூனிட் மணல் குவியலை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம் அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் ராமநாதன் என்பவரின் நிலத்தில் தென்பெண்ணை ஆற்று மணல் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. தாசில்தார் ஆனந்தகுமார் தலைமையிலான அலுவலர்கள் அங்கு சென்று 50 யூனிட் மணல் குவியலை பறிமுதல் செய்தனர்.

    மயிலத்தில் தார் சாலை போடாமல் முறைகேடு

    மயிலத்தில் தார் சாலை போடாமல் முறைகேடு செய்ததாக எழுந்த புகார் எதிரொலியால் பி.டி.ஓ., பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஒன்றியம் கண்ணியம் கிராமத்தில் தார் சாலை அமைக்கும் பணியில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கலெக்டர் மோகன், முறைகேடு புகார் எதிரொலியால் மயிலம் பி.டி.ஓ., புருஷோத்தமனை அங்கிருந்து பணியில் இருந்து விடுவித்தும், துணை பி.டி.ஓ., வீரம்மாளை சஸ்பெண்ட் செய்யும், ஒப்பந்த ஊழியரான கணினி ஆப்ரேட்டர் பாலுவை பணி நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளார்.

    இணையவழி பட்டா மாறுதல் குறித்து வி.ஏ.ஓ.,க்களுக்கு நாளை முதல் பயிற்சி

    இணையவழி பட்டா மாறுதல் குறித்து வி.ஏ.ஓ.,க்களுக்கு நாளை முதல் பயிற்சி வகுப்பு துவக்கப்படுகின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களின் பட்டா மாறுதல் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வி.ஏ.ஓ.,க்களுக்கு இணையவழி பட்டா மாறுதல் தொடர்பாக உட்பிரிவுகள் செய்து பட்டா வழங்க கோரும் மனுக்களை தீர்வு செய்வது தொடர்பான பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 12ம் முதல் 19ம் தேதி வரை காலை 10:00 மணி முதல் மாலை 6:00 வரை அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நில அளவைத் துறை அலுவலர்களால் வி.ஏ.ஓ.,க்களுக்கு பயிற்சி வகுப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

    மின்வாரிய லைன் இன்ஸ்பெக்டர் மாயம்

    விழுப்புரம் சாலாமேட்டை சேர்ந்தவர் வெங்கடேசன், 49; மின்வாரிய லைன் இன்ஸ்பெக்டராக மடப்பட்டில் பணிபுரிந்து வருகின்றார். அதிக குடிப்பழக்கமுடைய இவர், சில தினங்களாக குடியை நிறுத்தியிருந்தார். இந்நிலையில், கடந்த 8ம் தேதி வீட்டிலிருந்து வேலைக்கு சென்றவர், திரும்பிவரவில்லை.

    விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

    அனுமதியின்றி மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல்

    விழுப்புரம் அடுத்த காவணிப்பாக்கம் வி.ஏ.ஓ., நந்தகுமார், திருப்பாச்சனுார் தென்பெண்ணை ஆற்றில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, விழுப்புரத்தை சேர்ந்த ராஜவேல், விஜய்பாபு ஆகியோர் அனுமதியின்றி டிப்பர் லாரியில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதை தடுத்த நந்தகுமாரை, பணி செய்யவிடாமல் தடுத்தனர்.

    விழுப்புரம் தாலுகா போலீசார் லாரியை பறிமுதல் செய்து, ராஜவேல், விஜய்பாபு மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

    கழிவறை இடித்ததை தட்டிக்கேட்ட மூதாட்டியை தாக்கிய நபர்

    கழிவறை இடித்ததை தட்டிக்கேட்ட மூதாட்டியை தாக்கிய மூன்றுபேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். விழுப்புரம் அடுத்த கண்டமானடியை சேர்ந்தவர் ஏசகன் மனைவி பேபி, 64; இவரது வீட்டு கழிவறையை பக்கத்துவீட்டை சேர்ந்த மடத்தி மகன் பாபு, 44; அவரது தாய் கிருஷ்ணவேணி, 60; மற்றும் உறவினர் அய்யனார் மனைவி மகாலட்சுமி, 30; ஆகியோர் சேர்ந்து இடித்துள்ளனர். விழுப்புரம் தாலுகா போலீசார் பாபு, கிருஷ்ணவேணி, மகாலட்சுமி மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

    அதிக ஒலி எழுப்பும் ஹேர் ஹாரன்களை
    அகற்றுமாறு வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை


    விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பயன்படுத்தினால் அதனை கண்டுபிடித்து அகற்றும்படி சென்னை போக்குவரத்து ஆணையர் நடராஜன், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

    விழுப்புரம் புதிய பஸ் நிலையம், விழுப்புரம்- புதுச்சேரி சாலை, விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலை, விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அரசு, தனியார் பஸ்கள் உள்ளிட்ட 150 வாகனங்களில் விதிமுறைகளை மீறி அதிக ஒலி ஒழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர் .

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்.
    Published by:Karthick S
    First published:

    அடுத்த செய்தி