திருச்சி மாவட்டம் சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள மேனகாநகரில் வைரம் என்ற அப்பார்ட்மெண்ட் உள்ளது. இந்த அப்பார்ட்மெண்ட்டை இதே பகுதியைச் சேர்ந்த திருநாராயண நகர் பகுதியை சேர்ந்த உமர் மகன் கமாருதீன் என்பவர் இந்த அப்பார்ட்மெண்ட்டைக் கட்டியுள்ளார்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை விற்பனை செய்வதற்காக அப்பகுதியில் உள்ள இபி ட்ரான்ஸ்பாரம் அருகே விளம்பர பதாதகையினை வைத்துள்ளனர். இரவு டோல்கேட் பகுதியில் பெய்த கடும் மழையினால் இந்த விளம்பரப் பதாகை தரையின் கீழே விழுந்து கிடந்தது.
கீழே கிடந்த பதாதகயினை கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள் தூக்கியபோது காற்றின் வேகத்தில் அருகில் இருந்த இபி டிரான்ஸ்பர்மில் சாய்ந்த்து.
இதில் மண்ணச்சநல்லூர் அருகே சென்னகரை பகுதியைச் சேர்ந்த பழனிவேல் மகன் சேட்டு வயது 36 என்பவரும் லால்குடி திருமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் செல்லதுரை வயசு 40 என்பவரும் உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்த விமல்குமார் என்பவர் திருச்சி திருவானைக்கோவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கொள்ளிடம் காவல் துறையினர்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
செய்தியாளர்- என்.மணிகண்டன், திருச்சி.
உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.