ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில் மணல் அள்ளுவதை தடுக்க உத்தரவிட்ட ஆர்.டி.ஓ முதல் உலக நன்மைக்காக கடலில் இறங்கி தியானம் வரை காண்போம்.
ஒரு சட்டி மணல் கூட வெளியே செல்லக்கூடாது; உத்தரவிட்ட ஆர்டிஓ
பரமக்குடியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் அக்கிரமேசி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வைகையாற்றில் அதிக அளவில் மணல் திருட்டு நடைபெறுவதாக ஆர்டிஓ முருகனிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து, ஒரு சட்டி மணல் கூட வெளியே அள்ளி செல்லக் கூடாது என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரமக்குடி ஆர்.டி.ஓ முருகன் உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில் வருவாய் துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை துறை என ஐந்து துறைகளில் 97 பயனாளிகளுக்கு ரூபாய் 6 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
உலக நன்மைக்காக கடலில் இறங்கி தியானம்
ராமநாதபுரம் பிராண கீளர்ஸ் மையம் சார்பில் உலக நன்மை, உக்ரைன் அமைதி பெறவும் மற்றும் இலங்கை மக்கள் பொருளாதார முன்னேற்றம் பெறவும், உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடற்கரையில் கடலில் இறங்கி பெண்கள் தியானம் செய்தனர்.
ஓடும் இரயிலில் தவறி விழுந்து இளைஞர் ஒருவர் பலி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ரயில் நிலைய தண்டவாளத்தில் 25 வயது மதிப்புள்ள ஆண் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பரமக்குடி ரயில்வே காவல்துறையினர் உடலை கைப்பற்றி ஆய்வு செய்தபோது பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூரில் இருந்த பயணித்த பேருந்து பயணச்சீட்டு வைத்துள்ளார்.
சென்னையில் இருந்து நேற்று இரவு கிளம்பி ராமேஸ்வரம் வந்த மெயில் ரயிலில் பயணித்தபோது படிக்கட்டில் தவறி விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என்ற கோணத்தில் ரயில்வே காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
சட்டவிரோதமாக மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
பரமக்குடி அருகே நெல்மடூர் அய்யனார் கோவில் அருகே அனுமதியின்றி மண் அள்ளுவதாக பரமக்குடி தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தபோது அனுமதியின்றி மண் அள்ளி கொண்டிருந்த இரண்டு டிராக்டர்கள் மற்றும் ஒரு எந்திரத்தை பறிமுதல் செய்து அலுவலகத்திற்கு கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது.
பாட்டியை வெட்டி கொன்ற வாலிபர் காவல்துறையினர் விசாரணை
சாயல்குடி அருகே மாரியூரைச் சேர்ந்த மாரியம்மாள் (75). வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருக்கும் போது இவரது பேரன் மணிபாரதி தூங்கிக் கொண்டிருந்த பாட்டியை அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பித்து சென்று விட்டார். இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார்.
இதையடுத்து, தகவல் அறிந்து வந்த சாயல்குடி காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து தப்பித்து சென்ற மணிபாரதியை தேடி வருகின்றனர்.
இரண்டு நாட்களாக கோயில் காணிக்கைகள் எண்ணப்படுகிறது
ராமேஸ்வரம் ராமநாத சுவாமிகள் திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயில், நம்புநாயகி அம்மன் கோயில், ராமர் தீர்த்தம், லட்சுமண தீர்த்தம், ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் மூலம் தரப்பட்ட காணிக்கைகளை கோயில் பணியாளர்கள் மூலம் கைப்பற்றி காணிக்கைகள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு உண்டியல் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள் மற்றும் ராமேஸ்வரத்தில் பல்வேறு பகுதிகளில் உழவாரப்பணி மேற்கொள்பவர்கள் உள்ளிட்டோர் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உண்டியல் எண்ணும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்
தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலால் தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாக உள்ளது.
இதையடுத்து, அரிச்சல்முனை பகுதியில் ஆக்ரோஷமாக கடல் அலைகள் தடுப்புச்சுவரில் மோதி சீற்றமாக உள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுக்கின்றனர்.
நூதன முறையில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு
ராமநாதபுரம் அருகே கீழக்கரை திணைக்குளம் குடியிருப்பு சேர்ந்த வசந்தா (60). மூதாட்டி பேருந்தில் செல்லும்போது அருகில் இருந்த பெண் குளிரபானத்துடன் மயக்க மாத்திரையை கொடுத்து 6 பவன் தங்க சங்கிலியை திருடி விட்டுச் சென்றுள்ளார்.
இதையடுத்து, கீழக்கரை காவல்துறையினர் மூதாட்டியின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானிலை அறிக்கை
பாம்பன் முதல் ராமேஸ்வரம் வரை வீசும் காற்றின் வேகம்
காற்றின் வேகம்: 30 முதல் 50 கிமீ/ம வரை
வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகமாக உள்ளது
காற்றின் திசை: தென்மேற்கு
மழைக்கான வாய்ப்பு உண்டு.
இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தில் எந்தவொரு உயர்வும், குறைவும் இல்லாமல் கடந்த மாதத்தின் விலையே தற்போது வரை நீடிக்கிறது.
ராமநாதபுரம்
பெட்ரோல்–112.45, டீசல்– 102.19
ராமேஸ்வரம்
பெட்ரோல்– 112.79, டீசல்– 102.88
பரமக்குடி
பெட்ரோல்– 112.31, டீசல்– 102.41
திருவாடானை
பெட்ரோல்– 112.31, டீசல்–102.41
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ramanathapuram