Home /local-news /

ராமேஸ்வரத்திற்கு முதல் ஊரடங்கில் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க கோரிக்கை

ராமேஸ்வரத்திற்கு முதல் ஊரடங்கில் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க கோரிக்கை

முதல்

முதல் ஊரடங்கில் நிறுத்தப்பட்ட இரயில்கள் மீண்டும் இயக்க கோரிக்கை

Ramanathapuram District: ராமேஸ்வரத்திற்கு கொரோனா முதல் ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், வியாபாரிகள், சுற்றுலா வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அகில இந்திய புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்திற்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டபோது இந்த வழித்தடத்தில் பயணித்த பல்வேறு ரயில்கள் சேவைகள் கைவிடப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து ஓகா, வாரணாசி உட்பட பல்வேறு இடங்களுக்கு தொலைதூர ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனால் கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக ரயில்சேவைகள் முடங்கின.

    கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவைகள் தொடங்கின. என்றாலும் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பல ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படவில்லை.

    இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் எனவே கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் அனைத்தையும் மீண்டும் தொடங்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குறிப்பாக ராமேஸ்வரம்- மதுரை பயணிகள் ரயிலை மூன்று முறை இயக்க வேண்டும், ராமேஸ்வரம்- கன்னியாகுமரி இரு மார்க்கமும் உள்ளிட்ட ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மீட்டர்கேஜ் ரயில்பாதையில் இயக்கப்பட்டு வந்த ரயில்களை அகலரயில்பாதையாக மாற்றப்பட்டபோது நிறுத்தப்பட்டிருந்த வழித்தடங்களில் மீண்டும் ரயில்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமேஸ்வரம்- கோயம்புத்தூர் இரு மார்க்கமும், ராமேஸ்வரம் - பாலக்காடு பயணிகள் வண்டி இரு மார்க்கமும், ராமேஸ்வரம் - திருச்சி இரவு நேர பயணிகள் வண்டி இரு மார்க்கமும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் மக்களின் கோரிக்கையாக இருக்கும் சென்னை - ராமேஸ்வரம், ராமேஸ்வரம் - திருப்பதி அந்தியோதயா விரைவு வண்டிகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவனந்தபுரம் - மதுரை புனலூர் - பாலக்காடு ஆகிய விரைவு வண்டிகளை ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.
    ராமேஸ்வரம் திருப்பதி (16779/16780) விரைவு வண்டி அதிகமாக பக்தர்கள் பயன்படுத்தக்கூடிய வழித்தடமாக உள்ளது. தற்போது வாரம் மூன்று முறை இயக்கப்பட்டு வரும் இந்த வண்டியை தினசரி வண்டியாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் தற்போது வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வரும் ராமேஸ்வரம் - ஓகா (16733/16734) விரைவு வண்டியை வாரம் மூன்று முறை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வட மாநிலங்களிலிருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் ரயில்களை மதுரை வழியாக இயக்கினால் கூடுதல் வருவாயை ஈட்டித்தரும்.

    இதன்மூலம் பொது மக்களும் அதிகம் பயனடைய முடியும். எனவே மதுரை வழியாக விரைவு வண்டிகளை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram, Rameshwaram

    அடுத்த செய்தி