உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில் கடந்த மார்ச் 23ஆம் தேதி உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ஒன்றை மாதங்களில் கோயில் உண்டியலில் பெறப்பட்ட காணிக்கைகள் எண்ணும் பணி இன்று கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமிகள் திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில், நம்புநாயகி அம்மன் கோவில், ராமர் தீர்த்தம், லட்சுமண தீர்த்தம், ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட கோயில் பக்தர்கள் மூலம் தரப்பட்ட காணிக்கைகளை கோயில் பணியாளர்கள் மூலம் கைப்பற்றி காணிக்கைகள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு உண்டியல் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள் மற்றும் ராமேஸ்வரத்தில் பல்வேறு பகுதிகளில் உழவாரப்பணி மேற்கொள்பவர்கள் உள்ளிட்டோர் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உண்டியல் எண்ணும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஒன்றரை மாதங்களுக்கு பிறகு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில் உண்டியல் எண்ணும் பணி இன்று இரவு நிறைவுபெற்று தங்கம், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் ரொக்கப் பணம், சில்லரை காசுகள் உள்ளிட்ட கணக்கு விவரங்கள் சரிபார்க்கப்பட்டு இரவு கோயில் நிர்வாகத்தால் எவ்வளவு காணிக்கை வசூலாகியுள்ளது என்பதை கோயில் நிர்வாகம் சார்பில் தெரியபடுத்த உள்ளதாக திருக்கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ramanathapuram, Rameshwaram