ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் அனைத்து கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கும் பதவி உயர்வு அளிக்க வேண்டி கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இதையடுத்து, மேலும் மூன்று கட்டமாக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்து மாவட்ட அளவில் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பாக மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினர்.
மேலும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.