Home /local-news /

நாமக்கல் மாவட்டத்தில் (10.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ...

நாமக்கல் மாவட்டத்தில் (10.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ...

நாமக்கல் மாவட்டத்தில் (10.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் (10.05.2022) நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ... 

நாமக்கல் மாவட்டத்தில் 10.05.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்.

  நாமக்கல் மாவட்டத்தில் 10.05.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

  ஓடையில் கழிவுகள் கொட்டப்படுவதை கண்டித்து மக்கள் மறியல்

  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டூ குமாரபாளையம் செல்லும் வழியில் உள்ள ஓடை ஒன்று செரமிட்டாபாளையம் வழியாக செல்கிறது. இங்கு ஓடையிலும் செல்லும் வழியில் உள்ள சாலையோரத்திலும் மலைப்போல குப்பைகள் கொட்டப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இங்கு கொட்டப்படும் குப்பைகளை எரிக்கப்படுகிறது.

  இதனால் இந்த பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசுவதோடு, புகை மண்டலமும் சூழ்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உடல்நல குறைபாடுகளும், மூச்சு திணறலும் ஏற்படுகிறது.இதனால் சாலையோரத்தில் உள்ள ஓடையில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று சாலைமறியல் ஈடுபட்ட மக்கள். இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டது.

  நாமக்கல் மண்டலத்தில் முட்டை மாற்றமில்லை

  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த சில நாட்களாக 3 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு எந்தமாற்றமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து 05 காசுகள் உயர்த்தி தற்போது ஒரு சில நாட்களுக்கு பின்பு முட்டை விலை சற்று உயர்வு சந்தித்து 3 ரூபாய் 65 காசுகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.


  பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்

  நாமக்கல் மாவட்டத்தில் பதினொன்றாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தொடங்கியது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் என மொத்தம் 19, 842 பேர் 82 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். இதில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அலுவலர்கள், தேர்வு அறை கண்காணிப்பு அலுவலர்கள் தங்களது பணியில் ஈடுபட்டனர்.

  குழந்தைகளின் நலனுக்காக அப் எண் அறிமுகம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

  தமிழகத்தில் கொரோனா நோய்தொற்றுக்கு பிறகு குழந்தைத் திருமணம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பிற்க்காகவும் அவர்களின் நலனுக்காகவும் மாவட்ட நிர்வாகம் துரிதமாக செயல்படுவதற்காக வாட்ஸ் அப் எண்ணை (94861 11098) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

  அனைத்து துறைகள் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்

  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 57 ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் சார்பாக சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வேளாண் துறை, தோட்டக்கலை, கூட்டுறவு, வருவாய், கால்நடை என பல துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

  நாமக்கலில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடனும் காணப்பட்டது.

  நாமக்கல் மாவட்டத்தில் பகல் நேரத்தில் வெளியே வர முடியாத அளவிற்கு வெயில் வெளுத்து வாங்கி‌னாலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அங்ககே பலத்த காற்றுடனும் இடியுடனும் மழை பெய்து வந்தது. இதனிடையே இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடனும் குளிர்ச்சி சூழல் நிலவியது. கோடை வெயில் தொடங்கினாலும் இதுபோன்ற சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

  இன்று உழவர் சந்தையில் விற்கப்பட்ட காய்கறி விலை!

  நாமக்கல் உழவர் சந்தையில் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் 2, 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை சற்று உயர்வு சந்தித்து விற்கப்பட்டு வருகிறது.மேலும் பெரும்பாலான காய்கறிகளின் விலையில் நேற்றைய விலையை விட குறைந்தும், ஏற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டது.

  நூல் விலை உயர்வை கண்டித்து உற்பத்தி நிறுத்த போராட்டம்.

  கடுமையான நூல் விலையேற்றம் குறித்த குமாரபாளையம் வட்டார ஜவுளி தொழில் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் மே 16இல் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் உண்ணாவிரதப் போராட்டம்,மே 16 முதல் 21 வரை ஜவுளி உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

  சாலையை கடக்க முயன்ற போது விபத்து

  பரமத்திவேலூர் அருகே உள்ள மரவாபாளையத்தை சேர்ந்த ராமலிங்கம் கடைக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்குச் செல்ல கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் நெடுஞ்சாலை கடக்க முயன்றுள்ளார்.
  திடீரென பரமத்தி வேலூரில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்த கார் ராமலிங்கத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த ராமலிங்கம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆர்பாட்டம்

  பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் சொந்த வீடு, நிலம் இல்லாத குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் பின் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

  செய்தியாளர்: சே.மதன்குமார்-நாமக்கல்
  Published by:Karthick S
  First published:

  Tags: Namakkal

  அடுத்த செய்தி