திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு அருகே சரவணப் பொய்கை உள்ளது. இங்கு சுற்றுச் சுவர் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். பணியில் உள்ள ஊழியர்கள், அப்பகுதியில் அடர்ந்து இருந்த இலை தழை, சருகுகள் உள்ளிட்டவற்றை ஓரமாக கொட்டி வைத்தனர்.
மே 9 அன்று இரவு 7 மணியளவில் திடீரென அந்தக் குப்பை பகுதியில் இருந்து தீ மளமளவென எரியத் தொடங்கியது. இதை கண்ட அப்பகுதி மக்கள் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கும் மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை டவுன் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். இதனால் தீ மலை பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் தற்செயல் விபத்தா? அல்லது யாரேனும் சிகரெட்டை அணைக்காமல் போட்டார்களா போன்ற கோணங்களில் திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
எனினும் துரிதமாக செயல்பட்டு காட்டுத்தீயாக மாறி பெரும் விபத்து ஏற்படாமல் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்புத் துறைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.