Home /local-news /

பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அமலாக்க வேண்டும் - கோவை எம்.பி வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அமலாக்க வேண்டும் - கோவை எம்.பி வலியுறுத்தல்

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்

Coimbatore District: கொரோனா காலத்தில் இரண்டு துறையினர் அதிக லாபத்தை ஈட்டிவிட்டு தற்போது மீண்டும் காத்திருப்பதாக கோவை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசியுள்ளார்.

    கோவை: கொரோனா காலத்தில் மருத்துவம் மற்றும் பஞ்சாலைத்துறையினர் அதிக அளவிலான லாபத்தை ஈட்டியுள்ளதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசியுள்ளார்.

    மத்திய மாநில பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் மூன்றாவது மாவட்ட மாநாடு கோவை தாமஸ் கிளப்பில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    கொரோனா காலத்தில் இரண்டு துறையினர் பலனடைந்துள்ளனர். ஒன்று பஞ்சாலைகளின் முதலாளிகள் மற்றொன்று தனியார் மருத்துவமனைகள். இவர்கள் கொரோனா காலத்தில் அதிக லாபம் ஈட்டியுள்ளனர். தற்போது மூன்றாவது அலைக்காக காத்திருக்கிறார்கள்.

    இந்த காலகட்டத்தில் மருத்துவச்செலவு கடுமையாக இருப்பதால் பணம் இல்லாத மருத்துவம் வேண்டும் என்றும், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

    மாற்றம் என்ற வார்த்தையை தவிர அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கும் என்று காரல் மார்க்ஸ் கூறியுள்ளார். ரூபாய் நோட்டில் லட்சுமி படத்தை போட்டிருந்தால் பணம் மதிப்பு குறையாது என்று வெளிநாட்டு பல்கலைக்கழகத்திற்கு செல்லும் பேராசிரியர் சுப்ரமணியசாமி கூறுகிறார்.

    யாரும் திட்டமிடாமல் எதையும் செய்வதில்லை. திட்டமிட்டு ஒவ்வொன்றையும் செய்கிறார்கள். கடுமையான எதிர்காலத்தை நோக்கி செல்கிறோம். மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கிறார்கள், மாநில அரசு நமக்கு கிடைக்க வேண்டிய நிதியை பெற போராடுகிறது.

    போராடி பெற்ற உரிமைகளை பாதுகாப்பதோடு, புதிய உரிமைக்கான போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டி உள்ளது. தமிழகத்தில் மதவெறிக்கு இடமில்லை என்று கூறிய அரசை நாங்கள் ஒன்று கூடி தேர்வு செய்துள்ளோம்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறியதை தமிழக அரசு அமலாக்க வேண்டும். இந்தியாவிற்கு பல வழிகளில் முன்னோடியாக இருக்கிறோம் என்பதை போல் இந்த பழைய ஓய்வூதிய திட்டத்திலும் முன்னோடியாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் காப்பீட்டு திட்டத்தின் படி கொரோனா உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்ற ஓய்வூதியர்களுக்கு காப்பீட்டு தொகையை நிபந்தனைகள் இன்றி வழங்குதல், குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.ஒரு லட்சமாக உயர்த்துதல், புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட அனைவரையும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டுவருதல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த மாநாட்டில் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் சுரேந்திரன், பாலகிருஷ்ணன், மதன், குடியரசு, ஞான பிரகாசம், சுப்ரமணியன், சுப்ரமணியன், அரங்கநாதன், கருணாநிதி, வெங்கட்ராமன், மாணிக்கம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    Published by:Arun
    First published:

    Tags: Coimbatore

    அடுத்த செய்தி