கோவையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு மஹா திருக்கல்யாணம் மற்றும் கரகம், தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
கோவை ராம் நகர் பகுதியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. 63 வருட பிரசித்தி பெற்ற இக்கோவிலின் 40ஆம் ஆண்டு சித்திரை திருவிழா கோவிலின் செயல் அறங்காவலர் சண்முகசுந்தரம் தலைமையில் வசந்த குமார சிவாச்சாரியார் மந்திரம் முழுங்க கடந்த 26ஆம் தேதி தொடங்கியது.
கொடி கம்பம் அமைக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இக்கோவில் திருவிழாவில் கடந்த இரண்டு வாரக பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இன்று அம்மனுக்கு மஹா திருக்கல்யாணம், அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து அழகுசிம்ம வாகனத்தில் அம்மன் அமர்ந்த தேருடன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் கரகம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் ,அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மேலும் அம்மனுக்கு மாவிளக்கு பூஜை, மஞ்சள் நீராடல், அபிஷேக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.
உங்கள் நகரத்திலிருந்து(Coimbatore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.