Home /local-news /

கோவை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தில் ஊதியத்துடன் கூடிய இன்டர்ன்ஷிப் வாய்ப்பு

கோவை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தில் ஊதியத்துடன் கூடிய இன்டர்ன்ஷிப் வாய்ப்பு

கோவை மாநகராட்சி அலுவலகம்

கோவை மாநகராட்சி அலுவலகம்

கோவை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தில் புதிய பட்டதாரிகளுக்கு ஊதியத்துடன் கூடிய இன்டர்ன்ஷிப் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நகர்ப்புற கற்றல் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் புதிய பட்டதாரிகளுக்கு கோவை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    நகர்ப்புற கற்றல் வேலை வாய்ப்புத் திட்டமானது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அலுவல் அமைச்சகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆகியவற்றுக்கும் இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும்.

    இந்த நிலையில் புதிய பட்டதாரிகளுக்கு கோவை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    துலிப் திட்டத்தின் கீழ் புதிய பட்டதாரிகள் தன்னம்பிக்கை பெறுவதற்கும், மாநகராட்சிக்கு புதுமையான யோசனைகளை வழங்குவதற்கும் அரிதான வாய்ப்புகளை கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் அளிக்க முன்வந்துள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற:-

    விண்ணப்பதாரர்கள் கடந்த 18 மாதங்களுக்குள் பட்டப்படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பு பயிற்சிக்கான கால அவகாசம் அதிக பட்சம் ஆறுமாதங்கள் ஆகும். பயிற்சிக்கான மாத ஊக்கத்தொகை ரூ.10,000

    கல்வித் தகுதி

    விஷுவல் கம்யூனிகேசன், பி.ஆர்க்/ எம்.ஆர்க், பி.இ/பி.டெக் (ஐ.டி), பி.இ/பி.டெக் (சிவில்), எம்.பி.ஏ/பி.ஜி.டி.எம், தமிழ் முதுகலை, ஆங்கிலம் முதுகலை.

    மாநகராட்சியின் பணிச் சூழல் பட்டதாரிகளுக்கு சவாலான தளமாகும். இது அவர்களை அடுத்த நிலைக்கு தயாராக்குகிறது. தகுதி வாய்ந்த பட்டதாரிகளுக்கு இந்தியா முழுவதிலுமுள்ள வாய்ப்புகளை ஒரே மேடையில் ஒருங்கிணைத்து நகர்ப்புற நிர்வாகத்தில் விண்ணப்பிக்க இத்திட்டம் அனுமதிக்கிறது.

    ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 24ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆன்லைனில் விண்ணப்பிக்க : http://internship.aicte-india.org
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore

    அடுத்த செய்தி