கோவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும், காவல்துறையில் பணியாற்றுவோர்க்கு பாலின சமத்துவத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மகளிர் ஆணையத்திடம் மனு அளித்துள்ளனர்.
கோவையில் மகளிர் ஆணைய தலைவரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதிகா புதன்கிழமை மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. இந்த பிரச்னைகளில் மாதர் சங்கம் உரிய தலையீட்டை செய்து வருகிறது. மாவட்ட நிர்வாகம், சமூக நலத்துறை, காவல்துறை மற்றும் மகளிர் அமைப்பை இணைத்து ஒரு குழுவை உருவாக்க வேண்டும்.
காவல்துறையில் பணியாற்றுவோருக்கு பாலின சமத்துவம் தொடர்பான வகுப்புகளை நடத்துவது இக்காலத்தில் தேவையான ஒன்றாக உள்ளது.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு அளிக்கும் போது மாதர் சங்க நிர்வாகிகள் வனஜா, ஜோதிமணி, சுதா ஆகியோர் உடனிருந்தனர்.
உங்கள் நகரத்திலிருந்து(Coimbatore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.