Tamil News Live | இன்றைய முக்கியச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்.
Tamil News Live | இன்றைய முக்கியச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்.
மேலும் படிக்க ...தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 8.30 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், டெல்லி செல்ல இருந்த நிலையில் சரியாக 8: 20 மணிக்கு ஆறாம் நம்பர் கேட்டிற்கு வந்த முதலமைச்சர் டெல்லி செல்ல தயாராக இருந்தார். அப்போது ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜினில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது . அதனை அடுத்து 317 பயணிகளுடன் டெல்லி செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் திடீரென விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணம் மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் டெல்லி செல்ல முடியாமல் பயணத்தை ரத்து செய்து வீடு திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும் நாளை டெல்லி செல்வது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கர்நாடக மாநிலம் சிவமோகா தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சர்ச்சை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை நிறுத்தச் செய்த முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா. கன்னட கீதத்தை பாடுமாறு ஈஸ்வரப்பா கூறியதாக சர்ச்சை.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவிற்காக வைகை அணையில் இருந்து ஏப்ரல் 30ஆம் தேதி முதல் 5நாட்களுக்கு தண்ணீர் திறப்பு.மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா வரும் மே 5ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.இதற்காக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து ஏப்ரல் 30ஆம் தேதி முதல் 5நாட்களுக்கு 216மில்லியன் கன அடி நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதனால் வைகை அணையில் உள்ள மதகுகளை தயார் படுத்தி, சீரமைக்கும் பணியில் தற்போது நீர்வளத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு இரண்டு மணி நேரம் வேலை குறைப்பு. வாரம் ஒரு நாள் வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு வேலைக்கு வருவதற்கு பதிலாக 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதும். அரசு துறையில் அமல்படுத்தினால் அதை தனியார் நிறுவனங்களும் பின்பற்றுவார்கள் என்று நம்பிக்கை உள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார். வெறிநாய் கடிக்கான கருத்தரங்கில் கலந்து கொண்ட துணைநிலையில் ஆளுநர் தமிழிசை முதலமைச்சர் ரங்கசாமி கூட்டாக பேட்டி அளித்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள ஸ்டேன் மோர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு துவக்கப்பள்ளியில் 45 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.இந்நிலையில் இன்று மதியம் பள்ளியில் உணவு உட்கொண்ட 25 குழந்தைகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. மயங்கிய நிலையில் இருந்த 25 குழந்தைகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று காலை முதல் வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது திடீரென இடியுடன் கூடிய கனமழை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வருகிறது.
குறிப்பாக காரைக்கால், திருநள்ளாறு, கோட்டுச்சேரி, நெடுங்காடு, திருப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மாத தொடக்கம் முதலே வெயிலில் வாடி இருந்த மக்களுக்கு இந்த மழை புத்துணர்ச்சியை தந்துள்ளது.
சூதாட்டத்தால் ஏற்படும் மரணங்கள், குடும்பங்கள் வறுமையில் வாடுவது ஆகியவற்றை தடுக்க ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான சட்டத்தை தமிழக அரசு இயற்றியதில் என்ன தவறு? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி.
பொன்னியின் செல்வன்-2 செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் பார்த்திபன், “வருமான வரி சோதனை நடத்த வேண்டும் என்றால் நாளை பொன்னியின் செல்வன் ஓடும் திரையரங்குகளில் நடத்துங்கள். இந்தப் படம் 1,000 கோடி ரூபாய் வசூல் செய்யும். இந்தப் படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி” என்று தெரிவித்தார்.
பொன்னியின் செல்வன்-2 செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் பார்த்திபன், “வருமான வரி சோதனை நடத்த வேண்டும் என்றால் நாளை பொன்னியின் செல்வன் ஓடும் திரையரங்குகளில் நடத்துங்கள். இந்தப் படம் 1,000 கோடி ரூபாய் வசூல் செய்யும். இந்தப் படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி” என்று தெரிவித்தார்.
தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறதால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.
விஏஓ கொலைக்கு காரணமான முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் – தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம்
விழப்புரம் மாவட்டத்தில் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், குடிநீர் பட்டா வழங்குதல், உள்ளிட்ட திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
தஞ்சை மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக, பாஜக, அமமுக உறுப்பினர்களுக்கு முறையாக பேச அனுமதிக்கவில்லை என்றும் தஞ்சை கீழவாசல் பாலம் முறைகேடு முறையான விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்.
இதனால் திமுக அதிமுக, அமமுக, பாஜக உறுப்பினர்கள் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அல் உமா இயக்கத் தலைவர் பாஷா உடல் நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள எஸ்.ஏ பாட்ஷா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ரம்ஜான் பண்டிகைக்காக 15 நாட்கள் பரோலில் சென்ற பாட்ஷா, நேற்று மாலை கோவை மத்திய சிறைக்கு திரும்பினார்.
சிறை வாசலில் பாட்ஷாவிற்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காமல் விவசாயிகளை ஏமாற்றியதாக கூறி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கூட்டுறவு வங்கிக்கு ரூ. 4,36,000 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
தமிழகத்தில் உள்ள சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மே 1ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் துவக்கம். அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மே 9ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் துவங்கும் என தகவல்.
கோவை உக்கடம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு. தேச நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 6 ம் தேதி உக்கடம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தின் போது இடும்பாவனம் கார்த்தி பேசியதற்கு 5 மாதங்களுக்கு பின்பு வழக்கு பதிவு.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,355 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. கொரோனா தொற்றுக்கு 57,410 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றில் இருந்து 12,932 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்றுக்கு 26 பேர் உயிரிழந்துள்ளனர் – மத்திய சுகாதாரத் துறை
உள் துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு நேரில் சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகறாரும் இல்லை. பாஜகவுடனான அதிமுக கூட்டணி தொடர்கிறது” என்று தெரிவித்தார்.
சூடானில் உள்நாட்டு போரில் சிக்கி மீட்கப்பட்ட 9 தமிழர்கள் டெல்லி வந்தடைந்தனர். அதில் 5 பேர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். 4 பேர் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.