உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.
மேலும் படிக்க ...பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழகம் பங்கேற்காத நிலையில் முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு.
முறையாக தகவல் பரிமாற்றம் செய்யப்படாததன் காரணமாகவே தமிழகம் பங்கேற்காத நிலை ஏற்பட்டது பணியில் அலட்சியத்துடன் செயல்பட்டதன் காரணமாக மாநில உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு மாணவர்களின் வாய்ப்பு பறிபோனதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்.
School Games Federation of India, பள்ளி மாணாக்கர்களுக்காக வருடந்தோறும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது வழக்கம், இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வழங்கப்படும் Form-4 சான்றிதழ்கள் விளையாட்டு வீரர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதுடன், தேசிய அளவிலான… pic.twitter.com/QOBPHiKFHW
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) June 9, 2023
மதுரையைச் சேர்ந்த வயதான மூதாட்டி மற்றும் அவரது மகளை நில பிரச்சினை தொடர்பாக வேலூர் மத்திய சிறை தலைமை வார்டன் செந்தில்குமார் சிறையில் இருந்த இரண்டு குற்றவாளியை அழைத்துச் சென்று மிரட்டியுள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்தி வேலூர் மத்திய சிறைச்சாலை தலைமை வார்டன் செந்தில்குமாரை பணியிடம் நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வேலூர் மத்திய சிறைச்சாலை தலைமை வார்டன் செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இந்திய அணி, 296 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்களை எடுத்திருந்த நிலையில், இந்திய அணி 296 ரன்களை எடுத்துள்ளது.
கரூர் குளித்தலை அருகே வீரணம்பட்டி காளியம்மன் கோயில் திருவிழாவில் பட்டியலின இளைஞரை உள்ளே நுழையவிடாமல் தடுத்ததால் வருவாய்த்துறை அதிகாரிகள் கோவிலை பூட்டி சீல் வைத்தனர்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு இரண்டாவது நாளாக அதிமுக தரப்பு வாதங்கள் தொடர்ந்த நிலையில் வழக்கு திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் வழி நின்று கர்நாடகா மாநிலம் மேகதாவில் அணைக்கட்டும் முயற்சியை உறுதியாக தடுப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இரண்டாம் நாள் வாதம் இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது.
தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
பைக் டாக்ஸி முறையை தமிழ்நாடு அரசு இதுவரை ஏற்கவில்லை. இரு சக்கர வாகனத்தை வாடகைக்கு விடுவதற்கு எந்த விதியும் நிர்ணயிக்கப்படவில்லை. இதுதொடர்பாக காவல்துறை நடவடிக்கை தேவைப்படுகிறது- போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்.
தமிழ்நாடு அரசியலில் என்றென்றும் வைகோ தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளார் – திருமாவளவன்
வணிக மற்றும் தொழிற் நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்த்தப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜூன் 13-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை அண்ணா நகரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை நேரில் சென்று சந்தித்தார். மதிமுக பொதுச்செயலாளராக வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டணம் ஓராண்டில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளதற்கு தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று (08/06/2023) அதிகபட்சமாக 9.16 கோடி யூனிட்கள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் 02/06/2023 அன்று 9.06 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. சென்னையின் நேற்றைய மின் தேவை 3,872 மெகாவாட் ஆகும். அது எவ்வித தடங்களுமின்றி பூர்த்தி செய்யப்பட்டது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்துவருகிறார்.
தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் தூர்வாரும் பணிகள் மற்றும் குறுவை சாகுபடிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், நீர்வளத்துறை அதிகாரிகள், விவசாயத்துறை, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தற்போது வீடியோ காட்சிகள் மூலம் விவரித்து வருகின்றனர்.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.