அசாமில் சரக்கு ரயில் தடம் புரண்டது உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.
மேலும் படிக்க ...ஒடிசாவின் ஜஜ்பூர் பகுதியில் பெயத திடீர் மழையில் இருந்து தப்பிப்பதற்காக தொழிலாளர்கள் நான்கு பேர் நின்று கொண்டிருந்த ரயிலின் கீழ் ஒதுங்கியுள்ளனர். ரயில் பாதையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலில் இன்ஜின் இல்லாமல் இருந்தது. இருப்பினும் பலத்த காற்று வீசியதன் காரணமாக சரக்கு ரயிலின் பெட்டிகள் தானாகவே நகர்ந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ரயிலின் சக்கரத்தில் சிக்கி ஆறு பேர் வரையில் பலியானதாகவும், இரண்டு பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை புளியந்தோப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணிக் கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். பின்னர் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் கோட்பாட்டுக்கு அடித்தளம் அமைத்தவர் கருணாநிதி என்றும், கருத்தியலின் தலைவராக அவர் திகழ்ந்தார் என்றும் புகழாரம் சூட்டினார். திராவிடம் என்ற சொல்லை பார்த்து பயப்படுபவர்கள் கண்ணை மூடி விதாண்டாவாதம் செய்கிறார்கள் என்றும், எல்லாருக்கும் எல்லாம் வாய்த்து விடாக் கூடாது என்பவர்கள்தான் திராவிடத்தை எதிர்ப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
சென்னை மெரினாவில் ஆகஸ்ட் 7-ம் தேதி கருணாநிதி நினைவிடம் திறக்கப்படும் என கருணாநிதியின் நூற்றாண்டுவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம் கம்ரூப்பில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து. 20 பெட்டிகளில் நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம்புரண்டது.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்தவகையில் எதிர்கட்சிக்கட்சிகள் ஆலோசனை கூட்டம் ஜூன் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தமிழக முதல்வர் ஸ்டாலின், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்த பிறகு மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனா செய்தியாளர்களிடம் பேசுகையில், ” ஜூன் 15ஆம் தேதிக்குள் காவல்துறை விசாரணையை முடிக்க வேண்டும். மல்யுத்த வீரர்களுக்கு எதிரான அனைத்து எஃப்ஐஆர்களையும் திரும்பப் பெற வேண்டும் என்ற எங்களின் கோரிக்கை ஏற்ற அமைச்சர், “அதுவரை போராட்டங்களை நடத்த வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். மேலும், பெண் மல்யுத்த வீரர்களின் பாதுகாப்பும் கவனிக்கப்படும் என உறுதியளித்தையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம்.” என்றார்.
#WATCH | We had a discussion on some issues. Police investigation should be completed by 15th June and the minister has requested us not to hold protests until then. He also said the security of female wrestlers will be taken care of. We have requested that all FIRs against… pic.twitter.com/rPXCpPcMwU
— ANI (@ANI) June 7, 2023
திருச்சி மற்றும் தஞ்சாவூரில் நடைபெற்று வரும் நீர் நிலைகள் தூர்வாரும் பணிகளை பார்வையிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு திருச்சி வந்து, நாளை மறுநாள் ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளதால், நாளை (08.06.23) மற்றும் நாளை மறுநாள் (09.06.23) ஆகிய இரு தினங்கள் திருச்சி மாவட்டத்தில் முதலமைச்சர் செல்லும் வழிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளது.
அடுத்தாண்டு ஜனவரி 16ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு சென்னை சர்வதேச புத்தகக் காட்சி நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அறிவிப்பு கூட்டத்தில் பேசிய அவர், புத்தக மொழி பெயர்ப்புக்காக 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஐந்து லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியை தமிழக முதல்வர் மு.கஸ்டாலின், ‘மகிழம்’ மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்.
கரூர் அருகே கடவூர் சிந்தாமணி பட்டி பகுதியில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆடல் பாடலுக்கு அனுமதி கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த ரூ.89 ஆயிரம் கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பி.எஸ்.என்.எல் 4 ஜி, 5 ஜி சேவைகளை தொடங்கவதற்கு ஏதுவாக இந்த ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது.
With this spectrum allotment, BSNL will be able to:
Provide pan India 4G and 5G services
Provide 4G coverage in rural and uncovered villages under various connectivity projects
Read here: https://t.co/st9swEtmg1
(3/3) pic.twitter.com/5JtPPdlrm4
— PIB in Tamil Nadu (@pibchennai) June 7, 2023
அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களில் அறங்காவலர்களாக அரசியல்வாதிகளை நியமிப்பதைத் தவிர்க்க வேண்டும். அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் அறங்காவலர்களை நியமிக்கக் கூடாது. கோவில்களின் வருவாயை மத்திய கணக்கு குழு தணிக்கை செய்வதால் மாநில அரசின் உரிமை பறிபோகாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய அணி வீரர்களின் பட்டியலில் டெஸ்ட் கிரிக்கெட்டின் நம்பர் 1 பவுலரும் தமிழகத்தைச்சேர்ந்த வீரருமான அஸ்வின் இடம்பெறவில்லை.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு.
தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி தொகுதி -4க்கான காலிப்பணியிடங்கள் தற்போது 25000மாக உயர்ந்திருப்பதாக செய்திகள் வருகின்றன, எனவே 2022ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வு எழுதிய தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து 20,000 பேர் தேர்வு செய்து 20,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் மத்திய அமைச்சர் அனுராக் தாகுருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்கள் சந்திப்பில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வரும் 17-ம் தேதி பெற்றோர்கள் முன்னிலையில் ஊக்கத்தொக்கை வழங்கி விஜய் கவுரவப்படுத்தவுள்ளார்.
சிலரின் பேராசையினால் கனத்த இதயத்தோடு பிரிந்து அமமுக தொடங்கினோம். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக நிர்வாகிகளை ஒரே மேடையில் சந்திப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது என்று டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் நடைபெறும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் வைத்தியலிங்கம் இல்லத் திருமண விழாவில் ஓ.பன்னீர் செல்வமும், டி.டி.வி.தினகரனும் பங்கேற்றுள்ளனர்.