Tamil Live Breaking News : எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.

மேலும் படிக்க ...
06 May 2023 22:54 (IST)

தி கேரளா ஸ்டோரி - நாளை காட்சிகள் ரத்து

தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தி மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. இந்த நிலையில் அந்த காட்சிகளும் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.

06 May 2023 21:42 (IST)

சென்னை - டெல்லி போட்டிக்கான டிக்கெட் விற்பனை

வரும் மே 10ஆம் தேதி நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் 8 ம் தேதி விற்பனை செய்யப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

06 May 2023 21:27 (IST)

அங்கன்வாடி ஊழியர்களுக்கு கோடை விடுமுறை

தமிழகத்தில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு மே 10 முதல் 24ஆம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு.

06 May 2023 20:25 (IST)

ஓ.பன்னீர் செல்வம் - சபரீசன் சந்திப்பு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபரீசன் சந்தித்து பேசிக்கொண்டனர்.

06 May 2023 20:25 (IST)

ஓ.பன்னீர் செல்வம் - சபரீசன் சந்திப்பு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபரீசன் சந்தித்து பேசிக்கொண்டனர்.

06 May 2023 18:13 (IST)

ஆளுநர் அரசிதல்வாதியாக செயல்படக்கூடாது - அன்புமணி

ஆளுநர் ஆளுநராக செயல்பட வேண்டும். அரசிதல்வாதியாக செயல்படக்கூடாது. அவர் சார்ந்த கட்சிகொள்கையை வெளிபடுத்தக்கூடாது. நீதிபதிகள் போன்று ஆளுநர்கள் நடுநிலையாக இருக்க வேண்டும் என அன்புமணி கருத்து.

06 May 2023 17:17 (IST)

சென்னை அணிக்கு 140 ரன்கள் இலக்கு...

சென்னை அணிக்கு எதிரானப் போட்டியில் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 139 ரன்கள் எடுத்துள்ளது.

06 May 2023 16:41 (IST)

முடிசூடினார் மூன்றாம் சார்லஸ்

இங்கிலாந்து மன்னராக முடிசூடினார் மூன்றாம் சார்லஸ்.

06 May 2023 16:32 (IST)

தலைமையாசிரியர் கலந்தாய்வுக்கு தடை - மதுரை கிளை நீதிமன்றம்

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

தகுதியானேரை கொண்டு பதவி உயர்வுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். TET தேர்ச்சி பெறாதோர் கலந்தாய்வில் பங்கேற்பது குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என மதுரை கிளை நீதிபதி உத்தரவு.

06 May 2023 15:45 (IST)

அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி. தமிழக அரசுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி.

06 May 2023 15:34 (IST)

மூன்றாம் சாட்லஸ் முடிசூடும் விழா - நடைமுறை தொடங்கியது

உலகமே உற்றுநோக்கும் மூன்றாம் சாட்லஸ் முடிசூடும் விழாவின் நிகழ்ச்சி தொடங்கியது.

06 May 2023 15:02 (IST)

சென்னை அணி டாஸ் வெற்றி

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் சென்னை – மும்பை போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

06 May 2023 14:33 (IST)

ஒப்பந்த நிறுவனங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

தரமில்லாத அரசு கட்டிட பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனம் மீது கடும் நடவடிக்கை என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் பிளாக் லிஸ்டில் வைக்கப்படும் என ஈரோட்டில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

06 May 2023 13:13 (IST)

வேங்கை வயல் விவகாரம்: 2 மாதத்தில் அறிக்கை

வேங்கை வயல் கிராமத்தில் குடிநீரில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என நேரில் ஆய்வு செய்த நீதிபதி சத்திய நாராயணன் தகவல். அடுத்தக்கட்ட விசாரணை இரண்டு, மூன்று வார காலத்துக்குள் மீண்டும் நடைபெறும் – நீதிபதி சத்தியநாரயணன்

06 May 2023 12:46 (IST)

பட்டா நிலத்தை மயானமாக பயன்படுத்த முடியாது: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருவள்ளூர் மாவட்டம், நொச்சிலி கிராமத்தில் இறந்தவர் உடலை பட்டா நிலத்தில் புதத்தை எதிர்த்து அதே பகுதியை சேர்ந்த பாபு நாயுடு என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். கிராமத்தில் மயான வசதி இருக்கும் நிலையில் பட்டா நிலத்தில் உடலை புதைக்க முடியாது என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் உடல் புதைக்கப்பட்ட நிலம் மனுதாரருக்கு சொந்தமானது அல்ல என்றும் நிலத்தின் உரிமையாளரின் அனுமதியோடு தான் உடல் புதைக்கப்பட்டதாக இறந்தவரின் மனைவி தரப்பு வாதம் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் உரிமையாளர் அனுமதி அளித்தாலும் கூட, பஞ்சாயத்து சட்டப்படி, பட்டா நிலத்தில் உடலை புதைக்க முடியாது என்றும் புதைக்கப்பட்டவரின் உடலை தோண்டி எடுத்து மயானத்தில் அடக்கம் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

06 May 2023 11:49 (IST)

26 கிமீ பிரம்மாண்ட சாலை பேரணியை தொடங்கிய பிரதமர் மோடி

கர்நாடகாவில் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான தேதி நெருங்கியுள்ளதால் அரசியல் கட்சிகளின் தேர்தல் பரபரப்புரை சூடு பிடித்துள்ளது. ஆளும் பாஜக அரசு மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது.

இதற்காக பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக முன்னின்று சூறாவளி பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதன் முக்கிய பகுதியாக அவர் இன்று கர்நாடகா தலைநகர் பிரதமர் மோடி சாலை பேரணி தொடங்கியது. பிரதமர் மோடியை சாலையின் இருபுறங்களில் நின்று வரவேற்ற தொண்டர்கள் புன்னகையுடன் பூவை வாரியிறைத்தனர்.

06 May 2023 11:38 (IST)

தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய வேண்டும் : சீமான் வலியுறுத்தல்

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அமைந்தகரையில் உள்ள திரையரங்கம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் சீமான் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பாஜக, திமுக அரசுகள் படத்தை தடைசெய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.

06 May 2023 11:19 (IST)

செங்கல்பட்டு மாவட்ட சிறைச்சாலையில் கைதி ஒருவர் தற்கொலை முயற்சி

சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் ரகு (வயது 52). இவரை ஆலந்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்து செங்கல்பட்டு மாவட்ட சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் இன்று சிறைச்சாலையில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்போது அரசு மருத்துனையில் தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

06 May 2023 11:09 (IST)

"எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல்" - முதல்வர் ஸ்டாலின்!

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல். ஆனால் இதை தெரிந்தும் திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. மக்களை சாதியால், அதிகாரத்தல் பிரித்து பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது என்றும் தமிழ்நாட்டை சேர்ந்த அறிவார்ந்த மக்களுக்கு திராவிட மாடல் என்னவென்று புரியும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” என்ற சாதனை மலரை வெளியிட்டு பேசினார்.

 

06 May 2023 10:47 (IST)

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தோஹா டைமண்ட் லீல் தொடரில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் பதக்கம் தட்டி சென்ற நிலையில்  நீரஜ் சோப்ரா பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

കൂടുതൽ വായിക്കുക