Live in Tamil: இறுதி ஓவர் பரபரப்பு- சென்னையை வீழ்த்தியது பஞ்சாப்

இன்றைய முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.

மேலும் படிக்க ...
30 Apr 2023 19:25 (IST)

சென்னையை வீழ்த்திய பஞ்சாப் அணி

பஞ்சாப் அணிக்கு எதிரானப் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியைத் தழுவியது.

30 Apr 2023 19:10 (IST)

பேட்டிங்கைத் தேர்வு செய்த ராஜஸ்தான்

மும்பை அணிக்கு எதிரானப் போட்டியிஸ் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

30 Apr 2023 17:17 (IST)

200 ரன்கள் குவித்த சென்னை அணி

பஞ்சாப் அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்துள்ளது. டிவான் கான்வே அதிகபட்சமாக 92 ரன்கள் குவித்துள்ளார்.

30 Apr 2023 15:41 (IST)

பேட்டிங்கைத் தொடங்கிய சென்னை அணி

பஞ்சாப் அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை அணி பேட்டிங்கைத் தொடங்கியது. தொடக்க வீரர்களாக டிவான் கான்வேவும், ரூத்ராஜூம் களமிறங்கியுள்ளனர்.

30 Apr 2023 14:19 (IST)

”சிறப்பாக அமைந்தது..” - மனதின் குரல் 100 நிகழ்ச்சி குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ட்வீட்

“சாமானிய மக்களின் உழைப்பை உலகறிய நம் பாரத தேசம் முழுவதும் அறிய செய்து நூறாவது மனதின் குரல் 100 நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. கர்நாடக தேர்தல் பரப்புரைக்கு மத்தியில்,சிக்மங்களூர் தொகுதி மலை வாழ் காபிதோட்ட தொழிலாளர்கள் உடன் இணைந்து கேட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி” என மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

30 Apr 2023 13:15 (IST)

பிரதமர் மோடி மனதில் குரல் நிகழ்ச்சியில் அதிகமாக தமிழகம் குறித்து பேசியுள்ளார் : ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

தமிழக ஆளுநர் மாளிகையில், மன் கி பாத் ஒலிபரப்புக்கான சிறப்பு நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.  அப்போது அவர் பேசுகையில், “இந்த தர்பார் ஹால் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. ஆனால் இன்று மிக சிறப்பான நாளாகும். நாட்டில் புரட்சி ஏற்பட்டதற்கு உங்களை போன்றவர்களால்தான். இன்று ராஜ்பவன் உங்களது வாழ்த்துகளை பெற்றுள்ளது. அரசியல் தலைவர்கள் எல்லா வகையிலும் அரசியல் பேசுவார்கள் ஆனால் இன்றைய 100 மனதில் குரல் நிகழ்ச்சியில் எந்த விதமான அரசியலும் பேச வில்லை என்பது சிறப்பாகும்.” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “மனதில் குரல் நிகழ்ச்சியில் அதிகமாக தமிழகம் குறித்து பேசியுள்ளார் பிரதமர் மோடி” என்றார்.

30 Apr 2023 13:09 (IST)

'மன் கி பாத்' 100 வது நிகழ்ச்சி : ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் பங்கேற்பு

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற மனதின் குரல் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது  மனைவி மற்றும் பிரபலங்களுடன் பங்கேற்று உரையை கேட்டார்.

30 Apr 2023 13:01 (IST)

மனதின் குரல் 100வது நிகழ்ச்சி : தமிழக ஆளுநர் மாளிகையில் சிறப்பு நிகழ்ச்சி

தமிழக ஆளுநர் மாளிகையில், மன் கி பாத் ஒலிபரப்புக்கான சிறப்பு நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.  இதையடுத்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை குறிப்பிட்டு பேசிய நபர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விருது வழங்கி கவுரவித்தார்.

 

30 Apr 2023 12:51 (IST)

மனதின் குரல் பிரதமர் மோடி உரைகளின் தொகுப்பு நூல் : அண்ணாமலை வெளியீடு

சென்னை நடுக்குப்பத்தில் நடைபெற்ற மனதின் குரல் திரையிடல் நிகழ்ச்சியில், மனதின் குரல் உரையில் பிரதமர் மோடி இதுவரை தமிழ்நாடு குறித்து பேசிய கருத்துகளை தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை புத்தகமாக வெளியிட்டார். அதைத்தொடர்ந்து பேசுகையில், “இதுவரை நடைபெற்ற 99 மனதின் குரல் நிகழ்ச்சிகளிலும், பிரதமர் மோடி தமிழர்களுக்கு மிக முக்கிய இடத்தை கொடுத்துள்ளார்; 100வது நிகழ்ச்சியிலும் தமிழ்நாடு பழங்குடி மக்கள் மற்றும் பெண்கள் குறித்து பேசியதாக குறிப்பிட்டார்.

30 Apr 2023 11:59 (IST)

'மன் கி பாத்' 100 வது நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்களை பகிர பிரதமர் மோடி வேண்டுகோள்

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில் “ MannKiBaat100 -ல் இணைந்த இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு நன்றி . உண்மையிலேயே உற்சாகத்தால் மகிழ்ந்தேன். நிகழ்ச்சியைக் கேட்ட அனைவரையும் அந்தச் சிறப்புத் தருணங்களின் படங்களைப் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் NaMo செயலி அல்லது  mkb100.narendramodi.in  என்ற  இணைப்பு மூலம் இதைச் செய்யலாம்.” என பதிவிட்டுள்ளார்.

 

30 Apr 2023 11:48 (IST)

மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழகம் குறித்து பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100வது பகுதி இன்று காலை 11 மணி முதல் ஒலிபரப்பாகி வருகிறது. இதில் பிரதமர் மோடி பேசுகையில், “தமிழ்நாட்டின் பழங்குடியினப் பெண்கள் சூழலுக்கு நேசமான ஆயிரக்கணக்கான சுடுமண் கோப்பைகளை ஏற்றுமதி செய்தார்கள், இவர்களிடமிருந்து தேசம் நன்கு உத்வேகம் பெற்றது.

வேலூரில் 20,000 பெண்கள் ஒன்றிணைந்து நாகநதியை தூர்வாரி சீரமைத்து மீட்டெடுத்துள்ளது பெருமைக்குரியது.” என்றார்.

30 Apr 2023 11:35 (IST)

"நேர்மறை சிந்தனைகளை ஊக்குவித்த மனதின் குரல்" - பிரதமர் மோடி

“நேர்மறை சிந்தனைகளை ஊக்குவித்த மனதின் குரல்” – பிரதமர் மோடி

30 Apr 2023 11:23 (IST)

'மன் கி பாத்' 100 : சென்னை நடுக்குப்பதில் செம்மொழியான தமிழ் மொழி பாடல் ஒலிக்கப்பட்டது

மனதின் குரல் 100வது பகுதி ஒலிபரப்பையொட்டி சென்னை நடுக்குப்பதில் பாஜக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய செம்மொழியான தமிழ் மொழி பாடல் ஒலிக்கப்பட்டது. 

30 Apr 2023 11:17 (IST)

மனதின் குரல் மக்களுடன் தொடர்பை அதிகரித்தது : பிரதமர் மோடி பெருமிதம்!

பிரதமர் மோடி உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100வது பகுதி இன்று காலை 11 மணி முதல் ஒலிபரப்பாகி வருகிறது. இதில் பிரதமர் மோடி பேசுகையில் “மக்களுடன் நான் இணைவதற்கு ஒரு தீர்வாக அமைந்ததுதான் இந்த மனதின் குரல் நிகழ்ச்சி; இது ஒரு நிகழ்ச்சி என்பதை தாண்டி, எனக்கான நம்பிக்கை மற்றும் ஆன்மீக பயணமாகவே கருதுகிறேன்” என்றார்.

30 Apr 2023 10:58 (IST)

'மன் கி பாத்' 100 : மும்பையில் நிகழ்ச்சிக்கு அமித்ஷா வருகை

மும்பையில் உள்ள தஹனுகர் கல்லூரியில் காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் 100வது அத்தியாயத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்கவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபடன்வஜ்ஸ், பாஜக எம்பி பூனம் மகாஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

30 Apr 2023 10:55 (IST)

இலுப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி : 800 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இலுப்பூரில் உள்ள தரம் தூக்கிபிடாரி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. போட்டியை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். 800 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளனர். திரளான மக்கள் ஆரவாரத்துடன் போட்டியை ரசித்து வருகின்றனர்.

30 Apr 2023 10:50 (IST)

நாளை முதல் இந்த அரசு பேருந்துகள் இயக்கப்படாது : புதுச்சேரி போக்குவரத்து கழகம் அறிவிப்பு

புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் இயக்கப்படும் 22 பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படாது.

புதுச்சேரியில் அரசு சாலை போக்குவரத்து கழகமான பிஆர்டிசி யில் 130 பேருந்துகள் உள்ளன.அதில் 40க்கும் குறைவான பேருந்துகள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகிறது. 15 ஆண்டுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள அரசு வாகனங்களை அழிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையில் பிஆர்டிசி யில் தற்போது இயக்கப்படும் 40 பேருந்துகளில் பழைய மாடல்கள் உள்ள 22 பேருந்துகளில் சேவையை நிறுத்தப்படுகிறது.

அதன்படி புதுச்சேரியில் இருந்து குமுளி செல்லும் 2 பேருந்துகள், திருப்பதி செல்லும் 3 பேருந்துகள், ஓசூர் மற்றும் காரைக்கால், கோயம்புத்தூர் செல்லும் இரண்டு பேருந்துகள், புதுச்சேரியில் இருந்து காரைக்கால் மற்றும் நாகர்கோவில் செல்லும் பேருந்துகள், ஏனாமில் மூன்று டவுன் பேருந்துகள் என 22 பேருந்துகள் ஒன்றாம் தேதி முதல் இயக்கப்படாது.

30 Apr 2023 10:33 (IST)

பஞ்சாப்பில் வாயு கசிவால் 9 பேர் உயிரிழப்பு

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பால் பொருட்கள் தயாரிப்பு ஆலையில் இருந்து வாயு கசிந்ததில் 9 பேர் பலியாகினர்.

30 Apr 2023 09:05 (IST)

மதுரை சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டு தொடக்கம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக எம்.சத்திரப்பட்டி கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு தொடங்கியது.

30 Apr 2023 08:35 (IST)

அணைகளின் இன்றைய நீர்வரத்து, நீர் திறப்பு நிலவரம் இதோ...!

முல்லைப் பெரியாறு அணை

நீர் மட்டம் – 116.50அடி(142).

நீர் இருப்பு – 1,997மி.கன அடி.

நீர் வரத்து – 413கன அடி.

நீர் வெளியேற்றம் – 100கன அடி ( தமிழகத்திற்கு)

வைகை அணை நிலவரம்

நீர் மட்டம் – 53.87அடி(71).

நீர் இருப்பு – 2,540மி.கன அடி.

நீர் வரத்து – 14கன அடி.

நீர் வெளியேற்றம் – 72கன அடி.

மேட்டூர் அணை

30.04.2023 காலை 8:00 மணி நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் : 101.30

நீர்இருப்பு : 66.53 டிஎம்சி

நீர் வரத்து :
வினாடிக்கு 497 கன அடி

நீர் வெளியேற்றம் : காவிரியில் விநாடிக்கு 1,500 கன அடி (குடி நீர் தேவைக்காக)

കൂടുതൽ വായിക്കുക