இன்றைய முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.
மேலும் படிக்க ...நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோவை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது குறித்து நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இருமுறை பதிலளித்து விட்டதாகவும், இம்மாதிரியான ஆடியோவை வைத்து மட்டமான அரசியல் செய்பவர்களுக்கு தான் விளம்பரம் கொடுக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஜே.இ.இ தேர்வு முடிவுகள் jeemin.nta.nic.in என்ற இணையதளத்தில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
தானியங்கி மது விற்பனை குறித்து ஏற்கனவே டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. தனது இருப்பை காட்டிக்கொள்ள உண்மைக்கு மாறாக ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்
தானியங்கி மது விற்பனை குறித்து ஏற்கனவே டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. தனது இருப்பை காட்டிக்கொள்ள உண்மைக்கு மாறாக ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்
புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி விருது வழங்கும் விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டு பேசினார். அப்போது, இப்போதெல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்து அரசியலாக்கப்படுகிறது என்று கூறினார். மேலும் புதுச்சேரியில் கடைகளின் பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கைக் குஜராத் நீதிமன்றம் மே 2-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. மோடி சமூகத்தைக் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, எம்.பி பதவியில் இருந்து ராகுல்காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கு நீக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்டத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. அதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
சென்னை அண்ணாநகரில் உள்ள மால் ஒன்றில் தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யும் முறை அறிமுகமாகியுள்ளது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டைக் கருத்தில் கொள்ளாமல் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஈபிஎஸ் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு ரூ.500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடு தரக்கோரி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அண்ணாமலை சார்ப்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் அண்ணாமலைக்கு எந்த தொடர்பும் இல்லை என்று வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும், அவதூறு பரப்பும் வகையில் பேசிய ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் வழக்கறிஞர் வலியுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே மேலேந்தலில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நடந்த கட்டிட பணிக்குச் சென்ற 2 அரசுப் பள்ளி மாணவர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பொதுத்தேர்வை முடித்து விடுமுறையில் இருந்த பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக எம்.பி கனிமொழி, ரூ.1 கோடி நஷ்ட ஈடு கோரி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சொத்துப் பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை மன்னிப்பு கேட்கக் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தனியார் டிவியில் ரூ.800 கோடிக்குச் சொத்து எனக் கூறப்பட்ட புகார் அடிப்படை ஆதாரமற்றது என்றும், அவதூறு பரப்பும் வீடியோவை 48 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.பி. கனிமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செயற்கை இழை, விஸ்கோஸ் இழைகளுக்குக் கட்டாயச் சான்றிதழ் நடைமுறையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செயற்கை இழை பஞ்சுகளுக்குத் தரக்கட்டுப்பாடு ஆணைகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மாணவர்களுக்கு உயர்கல்வி ஆலோசனைகளை வழங்கப் பள்ளிகள் அளவில் உயர்கல்வி வழிகாட்டல் குழுவைப் பள்ளிக் கல்வித்துறை அமைத்துள்ளது. தலைமை ஆசிரியர், முன்னாள் மாணவர்கள், மேலாண்மைக் குழுத் தலைவர், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டல் குழு உறுப்பினர்களுக்கு மே 5-ம் தேதி வரை பயிற்சி அளிக்கவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பில், திரைப்பட நடிகர் அஜித் குமார் வைத்து எண்ணற்ற திரைப்படங்களையும், மகன் சிலம்பரசனை வைத்து காளை, வாலு போன்ற படங்களையும் மற்றும் தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களைத் தயாரித்து தனக்கென்று ஒரு வரலாறு படைத்த நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி மறைந்துவிட்டார் என்ற செய்தி மனதிற்கு அதிர்ச்சி அளித்தது” என்று கூறியுள்ளார்.
மேலும், அவரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று அவரின் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
விசாரணை கைதிகள் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் டிஜிபிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் மேலும் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் குறித்து டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு 4 வாரத்தில் பதிலளிக்கக்கூறி இருந்தது. இந்த நிலையில், பாண்டிச்சேரியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் பாதிக்கப்பட்ட சுபாஷ் என்றவர் கொடுத்த புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தனர். அதனைத்தொடர்ந்து, மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7,171 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்றுக்கு 51,314 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9,669 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7,171 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்றுக்கு 51,314 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9,669 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ரேஷன் கடைகளில் வாங்காத பொருட்களுக்கு பில் போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரேஷன் கடை பணியாளர்களுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பொருட்கள் வாங்காமல், வாங்கியது போல் குறுஞ்செய்தி வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
திமுகவுடன் மதிமுக இணைப்பு தொடர்பாக மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ நியூஸ்18 க்கு அளித்த பேட்டியில்,
திமுகவுடன் மதிமுகவை இணைப்பதில் கட்சியினருக்கு துளியும் உடன்பாடில்லை என்று கூறியுள்ளார். தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்தாலும் மதிமுகவுக்கு என்று தனிப்பட்ட கொள்கை உள்ளது. மனக்கசப்பு காரணமாக திமுக- மதிமுக இணைப்பு என அவைத்தலைவர் துரைசாமி கடிதம் எழுதியதாகவும், மூத்த நிர்வாகி என்ற மரியாதை காரணமாக துரைசாமி மீது நடவடிக்கை இல்லை என்றும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.