Tamil Live News: உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்
உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்.
மேலும் படிக்க ...டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி சந்திப்பு. இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் உடனிருக்கிறார்கள்.
கடந்த 11ஆம் தேதி விருத்தாச்சலம் தனியார் மழலையர் பள்ளியில் படிக்கும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக கவுன்சிலர் பக்கிரிசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக ஆட்சியில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது. தற்போதைய ஆட்சியில் சுமார் 11 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் பயில்கின்றனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
சூடானில் ராணுவம் துணை ராணுவம் இடையேயான போரின் காரணமாக சவுதி அரேபியாவில் பத்திரமாக வைக்கப்பட்ட 360 இந்தியர்களுடன் டெல்லி புறப்பட்டது முதல் மீட்பு விமானம். இரண்டாவது மீட்பு விமானம் சூடானிலிருக்கும் இந்தியர்களுடன் நாளை மும்பை வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று வருகைபுரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்ட அரங்கில் மாலை 5 மணியளவில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மூன்று மாவட்ட விவசாயிகள், மீணவர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினருடன் ஆலோசனை மேற்கொண்டு மனுக்களை பெறுகிறார்.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கும் என்பது மக்களின் மனதில் வந்துவிட்டது என தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமத்தில் அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பேச்சு.
சத்தீஷ்கர் மாநிலம் அரன்பூர் பகுதியில் நக்சல் ஒழிப்புப்படையினர் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல். நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல் துணை ராணுவ படை வீரர்கள் 10 பேர் பலியாகினர்.
பிரபல மலையாள நடிகர் மம்முகோயா ( 76 வயது ) காலமானார். மலப்புறம் மாவட்டத்தில் காளிகாவு என்ற இடத்தில் சில தினங்களுக்கு முன்பு கால்பந்து போட்டியை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் 450 க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “சூடானில் உள்நாட்டு போர் காரணமாக அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 400 பேர் உட்பட இந்திய குடிமக்களை அழைத்து வரும் ஆபரேஷன் காவேரி மீட்பு பணிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பை வழங்கிட தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த விதிகளுக்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது.
மணல் கடத்தலை தடுத்த தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் நேற்று அவரது அலுவலகத்திலேயே வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக நேற்றைய தினம் ஒருவர் கைது செய்யப்பட்டார். குற்றவாளிகளை கண்டறிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மாரிமுத்து என்பவரை காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.
ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் புதிய வழக்கு. அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நிறுவனங்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு. மனுதாக்கல் நடைமுறைகள் முடிந்தால் நாளை பட்டியலிடப்படும் அல்லது வழக்கமான பட்டியலில் இடம்பெறும் என நீதிபதிகள் வைத்தியநாதன், கலைமதி அமர்வு அறிவிப்பு.
ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதித்து தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு சமீபத்தில் ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று கடத்தப்பட்ட வடமாநிலத் தம்பதியின் குழந்தையை கள்ளக்குறிச்சி அருகே தனிப்படை போலீசார் மீட்டனர். பையில் வைத்து குழந்தையை கடத்திச் சென்ற உமா என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், நீட் தேர்வு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் மே 8ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை காந்திபுரம் விரைவு போக்குவரத்து கழகம் முன்பு கேரளா அரசு பேருந்துகளை சிறைபிடிக்கும் போராட்டம்.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் மதிமுக, தமுமுக ,விடுதலை சிறுத்தைகள், தமிழ்புலிகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்பு.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து 5,642 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 96 உயர்ந்து ரூ.45,136 ஆகவும் விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து 4,622 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ.36,976 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நேற்று இரவு போன் கால் மூலமாக பேசிய மர்ம நபர் ஒருவர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனையடுத்து மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் கொண்டு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் பொய்யானது என தெரிய வந்தது.
இதனையடுத்து பெரிய மேடு போலீசார் விசாரணையில் கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் கடந்த ஏழு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வரும் வியாசர்பாடியைச் சேர்ந்த மணிகண்டன் (21) என்பவர் தான் போலியான வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு மேலும் குறைத்துள்ளதாக தகவல். ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டின் மொத்த தேவையில் 7 சதவிகிதம் மட்டுமே விநியோகம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு விமானம் மூலம் டெல்லி பயணம். வரும் 28ஆம் தேதி காலை 11 மணியளவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க உள்ளதாகத் தகவல்.