உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.
மேலும் படிக்க ...12 மணி நேர வேலை சட்ட மசோதா மீதான செயலாக்கம் நிறுத்திவைப்பு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் ரோப்கார் சேவை நாளை 25.04.2023 மற்றும் 26.04.2023 ஆகிய இரண்டு நாட்கள் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவிப்பு.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவத்தையொட்டி பந்தக்கால் முகூர்த்த விழா விமர்சையாக நடைபெற்றது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்குகளின் விசாரணையை ஜூன் 8ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
ஜி ஸ்கொயர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘எங்களிடம் மறைப்பதற்கும் எதுவும் இல்லை, பயப்படுவதற்கும் எதுவும் இல்லை என்று உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறோம். இன்று நடைபெற்ற சோதனை முழுவதும் நாங்கள் அவர்களுக்கு ஒத்துழைத்தோம். எங்களுக்கு எதிராக கெட்ட எண்ணத்தில் மேற்கொள்ளப்படும் அவதூறுகளை இந்தச் சோதனை முடிவுக்கு கொண்டுவரும் என்று நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.
அமமுக பொருளாளராக எஸ்.கே.செல்வம் நியமனம். தலைமை நிலைய செயலாளராக தொட்டியம் எம்.ராஜசேகரன் நியமனம்
கர்நாடக மேலிட பாஜக பொறுப்பாளர் கேட்டுக்கொண்டதின் பெயரில் வேட்பாளரை திரும்பப் பெற்றது அதிமுக
கர்நாடகா புலிகேசி நகர் தொகுதியில் இருந்து வேட்பாளரை திரும்பப் பெற்றது அதிமுக
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடிக்க மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு
தென்காசி மாவட்டம் புளியங்குடி சந்தையில் எலுமிச்சை பழங்களில் விலை சூடு பிடித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு எலுமிச்சம் பழங்களின் விலை ஒரு கிலோ 30 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்த நிலையில் தொடர் வெயில் தாக்கத்தால் இன்று 100 ரூபாய் முதல் 120 வரைக்கும் விற்பனை
நீட் தேர்வை கணக்கில்கொண்டு 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியாவது ஒத்திவைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகாவில் ஓபிஎஸ் அணியின் 2 வேட்பாளர்களும் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்
கர்நாடகாவில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு அணியின் 2 வேட்பாளர்களும் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனர். காந்திநகரில் குமார், கோலார் தங்கவயலில் ஆனந்தராஜ் மனுக்களை திரும்ப பெற்றனர்.
12 மணி நேர வேலை சட்ட மசோதா தொடர்பாக
திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் 7 மணி அளவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்திக்கின்றனர்.
திருமண மண்டபங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யலாம் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பானைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனியாக அறிக்கைவெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் ஆடிட்டர் சண்முகராஜ் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்படுகிறார்.
திமுக பணம் சம்பாதிப்பதில் பில்கேட்ஸ் மற்றும் எலான் மஸ்க்குடன்தான் போட்டியிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “மதுவிலக்கே ஒற்றை இலக்கு என கூறிவிட்டு 12 மணிநேரம் மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கும் இந்த திமுக அரசு, இன்று கல்யாண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும், மதுபானம் அருந்தலாம் என அனுமதித்திருப்பதற்கு எனது கடும் கண்டனங்கள். மதுவுக்கு அடிமையாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்து, கலாச்சாரத்தின் மீது திராவகத்தை வீசியுள்ளது அரசு,
பொது அமைதியை சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரிக்கும் இத்தகைய மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்த அரசுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர் என்பது மட்டும் உறுதி” என்று விமர்சித்துள்ளார்.
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது – வானிலை ஆய்வு மையம்
சென்னையின் 6 இடங்களில் செட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை. 2020ஆம் ஆண்டு நடந்த வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறை அளித்த ஆவணங்களின் அடிப்படையில் சோதனை