Tamil Breaking News | மதுவில் சயனைடு: தற்கொலையா? கொலையா?

செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்.

மேலும் படிக்க ...
21 May 2023 22:05 (IST)

விராட் கோலி சாதனை

ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 60 பந்துகளில் தனது 7வது ஐபிஎல் சதத்தை பதிவு செய்துள்ளார். விராட் கோலி அடுத்தப்படியாக கிறிஸ் கெயில் 6 சதங்களும், ஜோஸ் பட்லர் 5சதங்கள் அடித்துள்ளனர். இந்த நிலையில் குஜராத் அணிக்கு 198 ரன்களை இலக்காக பெங்களூரு அணி நிர்ணயித்துள்ளது.

21 May 2023 20:30 (IST)

மதுவில் சயனைடு: தற்கொலையா? கொலையா?

தஞ்சையில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவில் சயனைடு கலந்திருப்பது உடல்கூறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த இருவரின் உடலிலும் சயனைடு கலந்திருப்பது உடற்கூராய்வில் தெரிய வந்துள்ள நிலையில் இருவரையும் கொலை செய்யும் நோக்கில் மதுவில் விஷம் கலக்கப்பட்டதா அல்லது தற்கொலையா என காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

21 May 2023 19:50 (IST)

குஜராத் அணி பீல்டிங் தேர்வு

பெங்களூரு அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹார்திக் பாண்டிய முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெங்களூரு பேட்டிங் செய்து வருகிறது.

21 May 2023 19:33 (IST)

ஆளுநரிடம் நாளை அதிமுக மனு

தஞ்சாவூர், செங்கல்ப்பட்டு மற்றும் விழுப்புரத்தில் நடைபெற்ற போலி மதுபான-கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கும் உரிய நீதி வேண்டியும், இதனை உரிய விசாரணைக்கு உடனே உட்படுத்த வேண்டி நாளை அதிமுக ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

21 May 2023 19:21 (IST)

மும்பை அணி அபார வெற்றி

சன் ரைசஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 200 ரன்கள் இலக்கை துரத்தி விளையாடிய மும்பை 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அதிரடியாக விளையாடிய கிரீன் 47 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

21 May 2023 19:05 (IST)

தூத்துகுடியில் கனமழை

தூத்துக்குடி பசுவந்தனை, வடக்கு கைலாசபுரம், குப்பனாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது.

21 May 2023 18:42 (IST)

பிரதமர் மோடி காலில் விழுந்து வரவேற்ற பிரதமர்

ஜப்பான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அடுத்ததாக பப்புவா நியூ கினியா சென்றடைந்தார். விமானத்தில் இறங்கிய பிரதமர் மோடியை பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப்பே காலில் விழுந்து வணங்கி வரவேற்றார்.

21 May 2023 18:38 (IST)

ரூ.2000 நோட்டுகள் வாங்கப்படும்

டிக்கெட் விற்பனையின் போது ஆம்னி பேருந்துகளில் ரூ.2000 நோட்டுகள் பயணிகளிடம் வசூலிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

21 May 2023 17:27 (IST)

மும்பை அணிக்கு 201 ரன்கள் இலக்கு

மும்பை அணிக்கு எதிரான கடைசி ஐபிஎல் லீக் போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை குவித்துள்ளது. அதிரடியாக ஆடிய தொடக்க வீரர்கள் விவிராட் சர்மா 69 ரன்களும், மயங்க் அகர்வால் 83 ரன்களை குவித்தனர். மும்பை தரப்பில் ஆகாஷ் மத்வால்  4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 201 ரன்கள் அடித்தல் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடி வருகிறது

21 May 2023 17:14 (IST)

ரூ.2000 நோட்டுகளை வாங்கதீர் - போக்குவரத்துறை

மே 23 முதல் பேருந்து பயணிகளிடம் ரூ.2000 நோட்டுகளை வாங்க வேண்டாம் என போக்குவரத்துறை அறிவுறுத்தியுள்ளது. பயணிகளிடம் பக்குவமாக எடுத்துரைத்து ரூ.2000 நோட்டுகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என அரசு பேருந்து நடத்துநர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

21 May 2023 15:04 (IST)

பந்துவீச்சைத் தேர்வு செய்த மும்பை அணி

ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

21 May 2023 14:36 (IST)

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்

நடிகர் விஜயின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் என நடிகர் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

21 May 2023 14:32 (IST)

பாரில் மது வாங்கி குடித்தவர் பலி

தஞ்சாவூரில் கீழவாசல் பகுதியில் பாரில் மது வாங்கி குடித்த முதியவர் குப்புசாமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுக்கடை திறப்பதற்கு முன்பே பாரில் கள்ளச்சந்தையில் மது வாங்கி கொடுத்த முதியவர் உயிரிழந்துள்ளார். மேலும் பாரில் மது வாங்கி குடித்த இளைஞர் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக  காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

21 May 2023 14:05 (IST)

ஆவின் மூலம் தண்ணீர் விற்பனை- அண்ணாமலை கண்டனம்

ஆவின் மூலம் குடிநீர் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்புக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

21 May 2023 13:23 (IST)

டாஸ்மாக்கில் மது வாங்கிக் குடித்த ஒருவர் உயிரிழப்பு- மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதி

தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுபானக் கடையில் கடை திறக்கும் முன்பாக ப்ளாக்கில் மதுபானம் வாங்கிக் குடித்த முதியவர் உயிரிழந்துள்ளார். அவருடன் சேர்ந்து குடித்த இளைஞர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிவருகிறார்.

21 May 2023 12:36 (IST)

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, தர்மபுரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

21 May 2023 12:19 (IST)

ஜூன் 20-ம் தேதி கலைஞர் கோட்டம் திறப்பு

திருவாரூரில் ஜூன் 20-ம் தேதி கலைஞர் கோட்டம் திறப்பு விழா நடைபெறவுள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கலைஞர் கோட்டத்தை திறந்துவைக்கவுள்ளார்.

21 May 2023 11:51 (IST)

விழுப்புரம் சரக டிஐஜியா பதவியேற்ற ஜியாவுல் ஹக்

விழுப்புரம் சரக டிஐஜி -யாக இருந்த பாண்டியன் ஓய்வு பெற்ற நிலையில் இன்று புதிய டிஐஜி-யாக ஜியாவுல் ஹக் பதவியேற்றுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், குட்கா, கஞ்சாவை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

21 May 2023 11:40 (IST)

குடிநீர் விற்பனையில் இறங்கும் ஆவின்

பால், பால் சார்ந்த பொருள்கள் விற்பனையைத் தொடர்ந்து ஆவின் நிர்வாகம் குடிநீர் விற்பனையில் இறங்குகிறது. பெட் பாட்டில்கள் மூலம் 500 மி.லி, 1 லிட்டர் பாட்டிலில் குடிநீரை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

21 May 2023 11:08 (IST)

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் தொடக்கியது. கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

കൂടുതൽ വായിക്കുക