Tamil Breaking News | பிளே ஆப் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்.

மேலும் படிக்க ...
20 May 2023 20:16 (IST)

திருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து

திருப்பதியில் ஜூன் 30வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால் கூடுதலாக 22,000 பக்தர்கள் தரிசனம் செய்ய வாய்ப்பு. மேலும் கோடை விடுமுறை ஒட்டி பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பால் திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது.

20 May 2023 19:19 (IST)

பிளே ஆப் சுற்றுக்கு நுழைந்தது சிஎஸ்கே

ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை வீழ்த்தி 17புள்ளிகளை பெற்று பிளே ஆப் சுற்றுக்கு நுழைந்தது தோனி தலைமையிலான சென்னை அணி. முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 223 ரன்களை குவித்துள்ளது.  அடுத்து ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இஅழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 77 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்று  12வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது

20 May 2023 19:12 (IST)

கொல்கத்தா அணி பந்துவீச்சு

லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் நித்திஷ் ரானா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். கொல்கத்தா அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு பறிபோன நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் லக்னோ அணி உள்ளது.

20 May 2023 17:23 (IST)

டெல்லி அணிக்கு 224 ரன்கள் இலக்கு

ஐபிஎல் தொடரில் டெல்லிக்கு எதிரான நடந்து வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 223 ரன்களை குவித்துள்ளது. சென்னை அணியில் அதிகபட்சமாக கான்வே 87, ருத்துராஜ் 79 ரன்களை எடுத்தனர். 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடி வருகிறது.

20 May 2023 16:46 (IST)

சித்தராமையாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்றுள்ள சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு வாழ்த்துகள். பதவிக்காலம் சிறக்க வாழ்த்துக்கள் என்ன பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

20 May 2023 16:13 (IST)

தெற்கில் விடியல் மற்ற பகுதிகளுக்கும் பரவட்டும் - முதல்வர்

தெற்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள இடியல் நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும் என்றும் விடியலை முன்னறிவிக்கும் மணியோசைதான் பெங்களூருவில் நடந்த பதவியேற்பு விழா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

20 May 2023 15:51 (IST)

மோடி - ஜெலென்ஸ்கி சந்திப்பு

ரஷ்யா-உக்ரைன் மோதலுக்குப் பிறகு முதன் முறையாக ஹிரோஷிமாவில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அப்போழுது பேசிய பிரதமர் மோடி”உக்ரைன் போர் என்பது உலகில் ஒரு பெரிய பிரச்சினை. அதை வெறும் பிரச்சினையாக நான் கருதவில்லை. பொருளாதாரம், அரசியல், என்னைப் பொறுத்தவரை, இது மனித நேயத்தின் பிரச்சினை. போரைத் தீர்க்க இந்தியாவும் நானும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என ஜெலென்ஸ்கியிடம் உறுதி அளித்தார்.

20 May 2023 15:36 (IST)

மாநில கல்விக் கொள்கை - அன்பில் மகேஷ் உறுதி

தேசிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக மாநில கல்வி கொள்கையை உருவாக்குவதில் தமிழக அரசு உறுதி. நீதியரசர் முருகேசன் குழு,2023 செப்டம்பர் மாதத்திற்குள் அறிக்கையை அளிக்கும் என்றும் மாநில கல்விக்கொள்கை உயர்மட்டக்குழுவில் மேலும் 2 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

20 May 2023 15:21 (IST)

சென்னை அணி பேட்டிங்

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு சென்னை அணி முன்னேறும்.

20 May 2023 14:16 (IST)

காங்கிரஸ் கொடுத்த 5 வாக்குறுதிகள் என்ன?

1. குடும்பத்தலைவிகளுக்கு ரூ.2000

2. வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ. 3000., டிப்ளமோ படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.1500

3. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில் உள்ள ஒருஒருவருக்கும் மாதம் 10 கிலோ அரசி.

4. அனைத்து மின் இணைப்பு உள்ள வீடுகளுக்கும் 200 வாட் மின்சாரம் இலவசம்.

5. அனைத்து மகளிருக்கும் பேருந்தில் இலவச பயணம்

20 May 2023 13:56 (IST)

இன்னும் 2 மணி நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு சட்டம் இயற்றப்படும் - ராகுல் காந்தி

கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்ற பிறகு, பேசிய ராகுல் காந்தி, இன்னும் 1-2 மணி நேரத்தில் கர்நாடகா அமைச்சரவை கூடி, கொடுத்த முக்கியமான 5 வாக்குறுதிகளுக்கு சட்டம் இயற்றப்படும் என தெரிவித்தார்,

 

20 May 2023 13:23 (IST)

பதவியேற்ற அமைச்சர்கள்

கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் மற்றும் 8 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

 

20 May 2023 13:18 (IST)

பிரியங்க் கார்கே அமைச்சரானார்

மல்லிகார்ஜுன் கார்கேவின் மகன் கர்நாடகா மாநிலத்தின் அமைச்சராக பதவியேற்றார்.

20 May 2023 13:02 (IST)

முதலமைச்சர், துணை முதலமைச்சரை தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்பு

கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றதை தொடர்ந்து அமைச்சர்கள் பரமேஸ்வரா, முனியப்பா, கே.ஜெ.ஜார்ஜ், எம்.மி.பட்டீல், சதீஷ் ஜார்கிஹோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்கா ரெட்டி, ஜமீர் அஹ்மத் கான் ஆகியோர் பதவியேற்றனர்.

20 May 2023 12:52 (IST)

கர்நாடகா பதவியேற்பு விழா

கர்நாடகா மாநிலத்தில், காங்கிரஸ் தனிப்பெரும்பானியோடு வெற்றி பெற்ற நிலையில், முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரை தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்று வருகிறார்கள்.

இவர்களுக்கு கர்நாடகா மாநிலத்தின் ஆளூநர் தவர் சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வருகிறார்.

20 May 2023 12:47 (IST)

துணை முதலமைச்சராக பதவியேற்றார் டி.கே.சிவக்குமார்

கர்நாடகா மாநிலத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்றார் டி.கே.சிவக்குமார்.

ஆளுநர் தவர் சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

20 May 2023 12:42 (IST)

பதவியேற்றார் சித்தராமையா

கர்நாடகா மாநில முதலமைச்சராக 2ஆவது முறையாக பதவியேற்றார் சித்தராமையா

20 May 2023 12:36 (IST)

’கை’கோர்த்த தலைவர்கள்

கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்பு விழாவில், தங்களின் ஒற்றுமையை காட்டும் வகையில், கைகோர்த்த ராகுல் காந்தி, டி.கே.சிவக்குமார், மற்றும் சித்தராமையா.

20 May 2023 12:29 (IST)

சித்தராமையா பதவியேற்பு விழா - தலைவர்கள் பங்கேற்பு

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா பதவியேற்பு விழாவில், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, பிரியங்கா காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல் ஹாசன், பரூக் அப்துல்லா, சீதாராம் யெச்சூரி, நிதீஷ் குமார், அசோக் கெலாட், திருமாவளவன், தேஜஸ்வி யாதவ், டி.ஆர்.பாலு, ஆகியோர் பங்கேற்பு

 

20 May 2023 12:15 (IST)

விழா மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை

கர்நாடகா மாநில முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்க உள்ள நிலையில், விழாவில் பங்கேற்க விழா மேடைக்கு வந்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

കൂടുതൽ വായിക്കുക