முகப்பு /செய்தி /Breaking and Live Updates / அண்ணனுக்கு சொத்து கொடுத்ததில் ஆத்திரம்.. அப்பாவை ஆட்டோ ஏற்றி கொன்ற மகன்கள் - விழுப்புரத்தில் அதிர்ச்சி

அண்ணனுக்கு சொத்து கொடுத்ததில் ஆத்திரம்.. அப்பாவை ஆட்டோ ஏற்றி கொன்ற மகன்கள் - விழுப்புரத்தில் அதிர்ச்சி

கொலை செய்யப்பட்ட நபர்

கொலை செய்யப்பட்ட நபர்

Crime News : அண்ணனுக்கு கூடுதலாக சொத்து கொடுத்த ஆத்திரத்தில் தந்தையை பெற்ற மகன்களே ஆட்டோ ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம்   குயிலாபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி வயது 72. சிறிய வீடு மற்றும் குறைந்த அளவில் விவசாய நிலத்தை சொத்தாக வைத்துள்ளார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.மூத்த மகன் வெங்கடேசன். சொத்தை பிரித்ததில் மூத்தவனுக்கு அதிக பங்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் தந்தை மீது கோபம் கொண்ட அடுத்த இரு மகன்களான  ஈஸ்வரன் மற்றும் முருகன் ஆகியோர் அடிக்கடி தகராறு செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ஆட்டோ ஓட்டுநர்கள். இருவரும் தந்தையை கொல்ல திட்டமிட்டனர். கடந்த மாதம் 21 ஆம் தேதி மூத்த மகன் ஈஸ்வரனின் தூண்டுதலின் பேரில் இளைய மகன் முருகன் தனது சொந்த ஆட்டோவில் அந்த வழியாகச் சென்ற பெரியசாமி மீது வேகமாக கொலை செய்யும் நோக்கில் ஏற்றினார். இதில் படுகாயம் அடைந்த பெரியசாமி புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதுகுறித்து மூத்த மகன் வெங்கடேசன் கொடுத்த புகாரில் ஆட்டோ ஓட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட முருகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றொரு மகன் ஈஸ்வரன் தலைமறைவாக உள்ளார்.

இந்நிலையில்  அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரியசாமி நேற்று இறந்தார். இதனால் அவரது மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டு தலைமறைவாக உள்ள இரண்டாவது மகன் ஈஸ்வரனை கோட்டகுப்பம் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.சொத்துக்காக தனது சொந்த தந்தையை ஆட்டோ ஏற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Crime News, Puducherry, Tamil News