முகப்பு /செய்தி /Breaking and Live Updates / கொங்கு மண்டலத்திலும் மதுரையிலும்  மாநாடுகளை நடத்த ஓ.பன்னீர்செல்வம் முடிவு...

கொங்கு மண்டலத்திலும் மதுரையிலும்  மாநாடுகளை நடத்த ஓ.பன்னீர்செல்வம் முடிவு...

திருச்சியில் நடைபெற்ற ஓபிஎஸ் மாநாடு

திருச்சியில் நடைபெற்ற ஓபிஎஸ் மாநாடு

OPS Meeting | திருச்சியை தொடர்ந்து கொங்கு மண்டலத்திலும் மதுரையிலும் மாநாடுகளை நடத்த  ஓ.பன்னீர்செல்வம் தரப்பு  முடிவு செய்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழக அரசியலில் அதிமுக அசைக்க முடியாத சக்தியாக இருந்தாலும் அதன் உட்கட்சி விவகாரம் அந்த சக்தியை உலுக்கி பார்க்கும் நிகழ்வுகள் ஜெயலலிதா மறைவிலிருந்து நடந்து வருகிறது. 2017 பிப்ரவரி மாதம் சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் பின்னர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் இருந்த போதும் மனங்கள் ஒன்றிணையாமல் கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோஷம் எழுந்தது. அதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர இந்த கோரிக்கை மேலும் வலுப்பெற்றது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பாக நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடிக்க ஓபிஎஸ்க்கு பெரும் தலைவலி ஏற்பட்டது. அதை தொடர்ந்து ஜூலையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் அதை எதிர்த்து வழக்குகள், அதிமுகவிலிருந்து நீக்கம், அதிமுக அலுவலகம் கலவரம், கட்சி அலுவலகத்திற்கு சீல் வைப்பு, மீண்டும் நீதிமன்றத்தில் வழக்குகள் இப்படி தினம் தினம் ஒரு திசையில் அதிமுகவில் உட்கட்சி விவகாரம் பயணித்து வருகிறது.

அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடித்தார் எடப்பாடி பழனிச்சாமி பின்னர் நீதிமன்ற உத்தரவின் படி அதிமுகவின் பொது செயலாளராக அவர் பதவியை ஏற்றுக்கொண்டார்.அதை எதிர்த்து வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலவையில் உள்ளது. இந்த நிலையில் தான் திருச்சியில் புரட்சி மாநாடு என்ற தலைப்பில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பிரம்மாண்டமாக மாநாடு நடைபெற்று முடிந்துள்ளது.  50 ஆயிரம் பேருக்கு சப்பாத்தி ரோல், வழிநடங்கிலும் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்று பேனர்கள், ஆங்காங்கே ஆள் உயர மாலைகளின் அணிவித்து மரியாதை என்று அவருக்கு உற்சாகம் தரும் வகையில் மாநாடு அமைந்தது அது அவருக்கும் அவர் தரப்பு நிர்வாகிகளுக்கும் புது நம்பிக்கையை கொடுத்துள்ளது.

top videos

    மாநாட்டில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவால் தான் முதலமைச்சராக மூன்றாவது முறை வந்தேன் என்று பேச, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரை கடுமையாக ஒருமையில் பேசினார் ஓபிஎஸ். பன்னீர்செல்வம் பின்னால் கூட்டம் இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தெரிவித்து வரும் சூழ்நிலையில் மிகப்பெரிய கூட்டத்தை திருச்சியில் காட்டியிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம், இதே போல கொங்கு மண்டலத்தில் ஒரு மாநாட்டையும் மதுரை பகுதியில் ஒரு மாநாட்டையும் நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    First published:

    Tags: Madurai, OPS