முகப்பு /செய்தி /Breaking and Live Updates / கல்லட்டியில் கார்களுக்கு நடுவே பாய்ந்த புலி - மிரண்டுபோன சுற்றுலா பயணிகள்

கல்லட்டியில் கார்களுக்கு நடுவே பாய்ந்த புலி - மிரண்டுபோன சுற்றுலா பயணிகள்

ஊட்டி

ஊட்டி

உதகை அருகே கல்லட்டி மலை பாதையை வீடியோ பதிவு செய்து வந்த சுற்றுலா பயணிகள்... வனப்பகுதியில் இருந்து திடீரென சாலையை கடந்த புலியால் அச்சமடைந்தனர்

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

மலைப்பாதையை வீடியோ செய்தபடி காரில் வந்த சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்காத நேரத்தில் வனத்திலிருந்து சாலையை கடந்த புலி.

உதகை அருகே கல்லட்டி மலைப்பாதையில்  வாகனத்தின் முன்பு கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென பாய்ந்த புலியால் வாகன ஒட்டிகள் அச்சம். சாலையை கடந்து சென்ற புலியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்  உதகை அருகே உள்ள கல்லட்டி சாலை வன பகுதி வழியாக செல்லும் மலை பாதையாகும்.  இந்த கல்லட்டி மலை பாதையில் 36 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையை வீடியோ பதிவு செய்தபடி வந்த போது திடீரென வன பகுதியிலிருந்து  புலி ஒன்று சாலையை நோக்கி பாய்ந்து சென்றது.

இதனால் வாகனத்தில் வந்தவர்கள் பீதி அடைந்தனர். கண்ணிமைக்கும்  நேரத்தில் பாய்ந்த புலியை வாகனத்தில் பயணித்த சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்த போது புலி சாலையை கடந்தது பதிவானது.  இந்த வீடியோ தற்போது சமூக வலை தலங்களில் வைரலாகி வருகிறது.

செய்தியாளர் : அய்யாசாமி (நீலகிரி)

top videos
    First published:

    Tags: Ooty, Tamil News, Tiger