முகப்பு /செய்தி /Breaking and Live Updates / IPL Qualifier 1: சி.எஸ்.கே vs குஜராத் டைட்டன்ஸ் இதுவரை நடந்த ஆட்டங்கள், முக்கிய ப்ளேயர்கள் விபரம் இதோ…

IPL Qualifier 1: சி.எஸ்.கே vs குஜராத் டைட்டன்ஸ் இதுவரை நடந்த ஆட்டங்கள், முக்கிய ப்ளேயர்கள் விபரம் இதோ…

சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்

தோனி வகுக்கும் வியூகத்தில் சென்னை அணி குஜராத் டைட்டான்ஸை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகர்கள் உள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குவாலிஃபையர் 1 போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பதால், இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இரு அணிகளும் இதுவரை மோதிய ஆட்டங்கள் மற்றும் அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய ஆட்டக்காரர்கள் உள்ளிட்டவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, கடந்த சீசனில்தான் அறிமுகம் ஆனது. இருப்பினும் அறிமுகம் ஆன முதல் தொடரிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நடப்பு சீசனில், லீக் தொடரில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்று 20 புள்ளிகளுடன் பாயிண்ட்ஸ் டேபிளில் முதல் இடத்தை பிடித்தது. சென்னை அணி 17 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை சென்னை மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் 3 முறை மோதியுள்ளன. இவை அனைத்திலும் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டிகள் புனே, மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் நடந்துள்ளன.

இதையும் படிங்க - IPL 2023 : குஜராத் டைட்டன்ஸை ஒருமுறை கூட வெல்லாத சென்னை அணி… மாற்றம் இன்று நிகழுமா?

நடப்பு சீசனில் அகமதாபாத்தில் நடந்த முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் 179 ரன்களை குஜராத் டைட்டன்ஸ் அணி சேசிங் செய்தது. கிரிக்கெட்டில் லெஜெண்டாக வர்ணிக்கப்படும் மகேந்திர சிங் தோனி சென்னை அணிக்கும், இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் தலைமை ஏற்றுள்ளனர். இரு அணிகளிலும் திறமை மிக்க ஆட்டக்காரர்கள் இருப்பதால் இந்த போட்டி மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஆகியோர் இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். ருதுராஜ் 500 ரன்களை கடந்திருக்கிறார். 600 ரன்களை டெவோன் கான்வே நெருங்கிக் கொண்டிருக்கிறார். இதேபோன்று குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 680 ரன்கள் எடுத்து சூப்பர் ஃபார்மில் இருக்கிறார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் முகமது சமி 24 விக்கெட்டுகளை இந்த தொடரில் கைப்பற்றி இருக்கிறார். இதேபோன்று மற்றொரு பவுலரான சுழற் பந்துவீச்சாளர் ரஷீத் கான் 24 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். எதிரணியில் திறமையான வீரர்கள் இருந்தாலும் சென்னை அணியில் கேப்டனாக தோனி இருப்பது அந்த அணிக்கு பல மடங்கு வலிமை சேர்த்துள்ளது. தோனி வகுக்கும் வியூகத்தில் சென்னை அணி குஜராத் டைட்டான்ஸை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகர்கள் உள்ளனர்.

First published: