முகப்பு /செய்தி /Breaking and Live Updates / சிலிண்டருக்கு ரூ.200 மானியம்... மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு.. மத்திய அரசு அறிவிப்பு..!

சிலிண்டருக்கு ரூ.200 மானியம்... மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு.. மத்திய அரசு அறிவிப்பு..!

கேஸ் சிலிண்டர்

கேஸ் சிலிண்டர்

தமிழகத்தில் 35 லட்சம் பேருக்கு சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்த முடிவெடுக்கப்பட்டதாக கூறினார்.

அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 38 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம், 47 லட்சத்து 58 ஆயிரம் அரசு ஊழியர்களும், 69 லட்சத்து 76 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்.

இதையும் படிங்க; கையில் 50 ரூபாய் இருந்தால் போதும், ஈஸியா தங்கம் வாங்கலாம்... எப்படி தெரியுமா?

top videos

    இதே போன்று சிலிண்டருக்கு வழங்கப்படும் 200 ரூபாய் மானியம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு வழங்கப்படும் வீட்டு பயன்பாடுகளுக்கான கேஸ் சிலிண்டர்களுக்கான மானியம் மேலும் ஒராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 35 லட்சம் பேருக்கு சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    First published: