முகப்பு /செய்தி /Breaking and Live Updates / லேப்டாப் சார்ஜ் செய்ய பவர் பேங்க்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

லேப்டாப் சார்ஜ் செய்ய பவர் பேங்க்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

லேப்டாப்

லேப்டாப்

செல்போனுக்கு பவர்பேங்க் இருப்பதுபோல லேப்டாப்புக்கும் பவர் பேங்க் அறிமுகம் ஆகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிகமான அவுட்புட் வாட்ஸ்களை கொண்டு புதிய இரண்டு லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஆம்பிரேன் நிறுவனம். வழக்கமாக நம் கையில் வைத்திருக்கும் பவர் பேங்குகளைக் கொண்டு நமது செல்போன்களைத்தான் இதுவரை சார்ஜ் செய்திருப்போம்.இனி நமது லேப்டாப் மற்றும் மேக்புக்குகளையும் நம்மால் பவர் பேங்க் கொண்டு சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஆம்… அப்படிப்பட்ட தரமான பவர் பேங்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஆம்பிரான் நிறுவனம்.

பவர்லிட் அல்ட்ரா மற்றும் ஆம்பிரேன்பவர்லிட் பூஸ்ட் பவர் பேங்க் என்ற பெயர்களில் இரண்டு டிவைஸ்களை அறிமுகம் செய்துள்ளது ஆம்பிரேன் நிறுவனம். இதன் மூலம் மேக் புக் மற்றும் சி-டைப் போர்ட் உள்ள லேப்டாப்களை நாம் சார்ஜ் செய்து கொள்ளலாம். அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்கள் இனி லேப்டாப் சார்ஜர்களை சுமந்து கொண்டுடு செல்லத் தேவையில்லை. ஆம்பிரான் பவர் பேங்குகள்  போதும்.

இவை ஹரியானாவில் உள்ள ஆம்பிரேன் உற்பத்தி நிலையத்தில் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. பவர்லிட் அல்ட்ரா பவர் பேங்க் சாதனம் 25000mah மற்றும் பவர்லிட் பூஸ்ட் பவர் பேங்க் சாதனம் 14400mah திறனுடன் வருகிறது. இவை உண்மையிலேயே பெரிய பேட்டரி திறன் கொண்ட பவர் பேங்க் சாதனங்களாகும். இந்த பவர் பேங்க்கள் ஒவ்வொன்றும் மூன்று அவுட்புட் போர்ட்களைக் கொண்டுள்ளன. எனவே ஒரே நேரத்தில் மூன்று டிவைஸ்களை சார்ஜ் செய்யலாம்.

ஆம்பிரேன் பவர்லிட் அல்ட்ரா 11 எல்இடி இண்டிகேட்டரை கொண்டுள்ளது. அதே நேரத்தில், ஆம்பிரேன் பவர்லிட் பூஸ்ட் பவர் பேங்க் சாதனம் பூஸ்ட் ஸ்பீடு தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இதன் மூலம் மின்னல் வேகத்தில் சார்ஜிங் செய்து கொள்ள முடியும். எதிர்பாராத மின் தடைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அம்சமும் இதில் உள்ளது. பவர்லிட் அல்ட்ரா உதவியுடன் சி- டைப் லேப்டாப்கள் மற்றும் மேக்புக்குகளை நம்மால் சார்ஜ் செய்து கொள்ள முடியும். பவர்லிட் பூஸ்ட், மறுபுறம், பவர் டெலிவரி மற்றும் குயிக் சார்ஜ் 3.0 தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது ஒவ்வொரு ஸ்மார்ட்போன் மற்றும் சி- டைப் லேப்டாப்பிற்கும் மிகச் சரியாக பொருந்தும்.

top videos

    இரண்டு பவர் பேங்குளும் 180 நாள் உத்தரவாதத்துடன் கிடைக்கின்றன. பவர்லிட் அல்ட்ரா சாதனம் கிளாசிக் பிளாக் நிறத்திலும், பவர்லிட் பூஸ்ட் சாதனம் பிளாக் மற்றும் பச்சை நிறத்திலும் கிடைக்கும். ஆம்பிரேன் பவர்லிட் அல்ட்ரா பவர் பேங்கை ரூ.4,999 என்ற விலையிலும், ஆம்பிரேன் பவர்லிட் பூஸ்ட் பவர் பேங்க் சாதனத்தை ரூ.3,999 என்ற விலையிலும் இன்று முதல் Flipkart.com மற்றும் Ambrane இணையதளங்களில் இருந்து வாங்கலாம்.

    First published:

    Tags: Laptop