முகப்பு /செய்தி /Breaking and Live Updates / அரசு அலுவலகத்தில் நடந்த அகோரி பூஜை... எஸ்.பி அலுவலகத்தில் புகார்..!

அரசு அலுவலகத்தில் நடந்த அகோரி பூஜை... எஸ்.பி அலுவலகத்தில் புகார்..!

அகோரி பூஜை

அகோரி பூஜை

காங்கேயம் நகராட்சி அரசு அலுவலகத்தில் அகோரியை வைத்து பூஜை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சியில் நிர்வாண அகோரியை அழைத்து வந்து அரசு அலுவலகத்தில் பூஜை நடத்தியவர்கள் நடவடிக்கை எடுக்க திவிக வலியுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சியில் ஆண் பெண் இருபாலரும் பணிபுரிந்து வரக்கூடிய சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காங்கேயம் நகராட்சி அரசு அலுவலகத்தில் அகோரியை வைத்து பூஜை நடத்தப்பட்டுள்ளதாக, கூறப்படுகிறது.

இதுதொடர்பாக திராவிடர் விடுதலை கழகத்தினர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், “பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் பொதுமக்கள் கூடும் இடத்தில் இவ்வாறு மதம் சார்ந்த நிர்வாண சாமியார்களை வைத்து பூஜை செய்வது அதிர்ச்சி அளிக்க கூடிய செயலாக உள்ளது, எனவே அரசு அலுவலகத்திற்குள் அகோரியை வைத்து பூஜை செய்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

செய்தியாளர்; பாலாஜி பாஸ்கர்  

First published:

Tags: Government office, Tiruppur