வீட்டில் நாய், பூனை போன்ற விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் அனுபவம் அலாதியானது. வேலை முடிந்து சோர்வாக வீட்டிற்கு வரும் போது அல்லது ஸ்ட்ரெஸ்ஸில் இருக்கும் போது செல்லப்பிரானைகள் செய்யும் சேட்டைகள் நிமிடம் இருக்கும் கவலைகளை போக்கி மகிழ்விக்கின்றன.
அவற்றுடன் விளையாடுவது நேரத்தை இனிமையாக்கும் அனுபவமாக இருக்கும். எனவே செல்லப்பிராணிகளை வளர்க்கும் பலரும் அவற்றோடு மிகுதியாக கொஞ்சி குலாவி மகிழ்கின்றனர். பிரக்டிக்கலாக பார்த்தால் கால்நடை மருத்துவர்களின் கூற்றுப்படி செல்லப்பிராணிகளை வளர்ப்போர் செய்யும் சில விஷயங்கள் அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் செல்ல பிராணிக்கும் தீங்கு விளைவிக்கும்.. நீங்களும் வீட்டில் செல்லப்பிராணி வளர்ப்பவரா.? செல்லப்பிராணி வளர்ப்பில் நிபுணர்கள் பட்டியலிட்டுள்ள சில உண்மைகளை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
உமிழ்நீரில் பாக்டீரியா:
செல்லிப்பிராணிகள் அழகானவை தான், அவற்றை பார்த்தால் செல்லம் கொஞ்ச தோன்றும் தான். ஆனால் இங்கே பிரபல நிபுணர் சொல்வதை பாருங்கள். டெல்லியில் உள்ள Gandhi’s Pet Hospital-ஐ சேர்ந்த மருத்துவரான டாக்டர் விவேக் அரோரா கூறுகையில், நாயின் உமிழ்நீரில் இருந்து வரும் பாக்டீரியாக்கள் தோல் தொற்று, எரிச்சல் மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். மேலும் நாயின் உரோமத்தில் பல பாக்டீரியாக்கள், டெர்மடோகாஃபைட்ஸ், பூச்சிகள், உண்ணிகள் போன்றவை இருக்கின்றன. இவை பொதுவாக commensals என குறிப்பிடப்படுகின்றன. இந்த Flora-க்கள் மனிதர்களுக்கு பல வகை தோல் நோய்த்தொற்றுகள், இம்யூன் குறைபாடு நோய்கள் மற்றும் சரும நோய்கள் போன்றவைகளை ஏற்படுத்தும்.
உங்களின் காஸ்மெட்டிக்ஸை நக்கும் செல்லப்பிராணிகள்:
செல்லப்பிராணிகள் என்றாலே பெரும்பாலும் வளர்ப்போரின் முகத்தை நக்க முயற்சிக்கும். சில இந்த பழக்கத்தை துவக்கத்திலேயே தடுத்து விடுவார்கள். ஆனால் சிலர் நக்கட்டுமே என விட்டுவிடுவார்கள். செல்லப்பிராணியின் பாக்டீரியா நமக்கு தீங்கு விளைவிக்கும் என்பது நமக்கு தெரியும். ஆனால் நம்மை அவை நக்குவதன் மூலம் நம்முடைய வியர்வை மற்றும் நாம் பயன்படுத்தும் காஸ்மெட்டிக் பொருட்களையும் சேர்த்தே அவை நக்குகின்றன.
பிரபல மருத்துவரான Shilpy Minz கூறுகையில், செல்லப்பிராணிகளை நம் முகத்தையோ உதடுகளையோ நக்க நாம் அனுமதிக்க கூடாது. ஏனென்றால் நம் முகம் மற்றும் உதடுகளில் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள் அவற்றின் வயிற்றில் தொற்று அல்லது நச்சுத்தன்மையை ஏற்படுத்தலாம். தவிர அவற்றுக்கு ஏதேனும் டென்டல் பிரச்னை இருந்தால் அதிலிருக்கும் பாக்டீரியா நமக்கு பரவி சிக்கலை ஏற்படுத்தும் என்றார்.
கைகளால் உணவளிக்கும் பழக்கம்:
எப்போதுமே உங்களது கைகளால் அவற்றுக்கு ஊட்டி விடுவது அல்லது உங்கள் பிளேட்டில் இருந்து எடுத்து அவற்றுக்கு கொடுப்பது அல்லது ஊட்டி விடுவது கூடாது என்கிறார் டாக்டர் அரோரா. இந்த பழக்கம் மனித உணவைக் கேட்க அவற்றை ஊக்குவிக்கும். தவிர உங்கள் கையால் அவற்றுக்கு உணவளிப்பது ஆரோக்கியமான பழக்கம் அல்ல. உங்கள் செல்லப்பிராணியை உங்களது பெட்ரூமிற்கு கொண்டு செல்வீர்கள் அல்லது உங்கள் படுக்கையில் படுக்க வைப்பீர்கள் என்றால், தினசரி உங்கள் செல்லப்பிராணியை சுத்தமாக இருப்பதையும், அதனை அழகுபடுத்துவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவை வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால் அவற்றின் கால்கள் மற்றும் பாதங்களை க்ளீன் செய்யவும்.
பாக்டீரியா மற்றும் தொற்றுகளைத் தவிர்ப்பதற்கான டிப்ஸ்:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pet Animal, Pet care