முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / தூக்கம் ரொம்ப முக்கியம் பாஸ்.. உறக்கத்துக்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கு!

தூக்கம் ரொம்ப முக்கியம் பாஸ்.. உறக்கத்துக்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கு!

உறக்க தினம்

உறக்க தினம்

World Sleep Day: எந்த நேரத்திலும் தூங்குவது தூக்கம் அல்ல. அதே போல எப்போதும் தூங்கி வழிவதும் தூக்கம் அல்ல. சரியான உறக்கம் என்பது இரவில் படுத்து அதிகாலையில் எழுவதாகும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

குழந்தைகள் தினம், மகளிர் தினம், ஆண்கள் தினம், மாணவர் தினம், ஆசிரியர் தினம், பட்டிருப்போம். தூக்கத்திற்கு ஒரு தினம் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? எது! தூக்கத்துக்கு எல்லாம் தனியாக நாள் இருக்கா என்று யோசிக்கிறீர்களா? உண்மையில் இருக்குங்க.

உலக உறக்க தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் மூன்றாவது வெள்ளியன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, உரக்க தினம் மார்ச் 17 ஆன இன்று வந்துள்ளது. தூரோகம் என்பதன் முக்கியத்துவத்தை பெரும்பாலான இன்றைய சமூகம் உணரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர்களுக்கு நல்ல தூக்கத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஆரோக்கியமான தூக்க பழக்கங்களை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள் தான் இன்று

சரியான உறக்கம் எது?

எந்த நேரத்திலும் தூங்குவது தூக்கம் அல்ல. அதே போல எப்போதும் தூங்கி வழிவதும் தூக்கம் அல்ல. சரியான உறக்கம் என்பது இரவில் படுத்து அதிகாலையில் எழுவதாகும். இரவில் நீங்கள் தூங்கும்போது பினியல் சுரப்பியால் மெலடோனின் வெளியிடப்படும். இரவு நேரத்தில் இதன் அளவு அதிகரிக்கும். அதன் பின்னர் ​​உங்கள் பிட்யூட்டரி சுரப்பி வளர்ச்சி ஹார்மோனை வெளியிடுகிறது, இது உங்கள் உடல் வளரவும், தன்னைத்தானே சரிசெய்யவும் உதவுகிறது.

இது நீங்கள் பகலில் தூங்கும் போது ஏற்படாது. உடல் தன்னை தயார்படுத்தாத போது அடுத்த நாளை நீங்கள் தொடர்ந்தால் உங்கள் உடல் சோர்வுறும். நோய் பாதிப்புகள் உண்டாகும். ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை பராமரிப்பதில் தூக்கத்தின் முக்கிய பங்கு இருந்தபோதிலும், உலகின் பல பகுதிகள் அதை ஒரு அடிப்படை தேவைக்கு பதிலாக ஆடம்பரமாக கருதுகின்றனர். ஓய்வின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த உறக்க நாள் தொடங்கப்பட்டது

உறக்க நாள் வரலாறு:

தூக்க மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற சுகாதார வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் குழு அமைப்பான உலக தூக்க சங்கத்தால் உறக்க நாள் 2008 இல் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர், உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூரப்படுகிறது.

உறக்க நாளின் முக்கியத்துவம்:

இந்த தினத்தின் முதன்மை நோக்கம் உலகளவில் தூக்கக் கோளாறுகள் பற்றிய தகவல்களை சேகரிப்பதும், அதை பற்றிய விழிப்புணர்வுகளை பரப்புவதும், தூக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சுகாதார வழங்குநர்களை ஒன்றிணைப்பதாகும். அதே போல மக்களை சரியான நேரத்தில் நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வலியுறுத்துவதாகும்.

இதையும் பாருங்க: மருத்துவர் சொன்ன ஒரு வார்த்தை...165 கிலோ உடல் எடையை குறைத்த நபர்.. சாத்தியமானது எப்படி?

உலக தூக்க நாள் 2023: தீம்

இந்த ஆண்டு உலக தூக்க தினத்தின் கருப்பொருள் 'உறக்கம் ஆரோக்கியத்திற்கு அவசியம்' என்பதாகும். நன்றாக சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்வது போலவே உடல், மன மற்றும் சமூக நல்வாழ்வைப் பேணுவதற்கு தூக்கத்தின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. நல்ல ஆரோக்கியத்திற்கான ஒரு முக்கிய நடத்தையாக தூக்கம் இன்னும் பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை. அதை கொண்டு வரும் முயற்சி தான் இது.

First published:

Tags: Sleep, World Sleep Day