ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12 ஆம் தேதி, சர்வதேச செவிலியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. செவிலியர்களின் உழைப்பு, அர்பணிப்பு மற்றும் உயிர்களைக் காப்பாற்றுவதில் பங்களிப்பு ஆகியவற்றை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த ஒரு நாள் கொண்டாடப்படுகிறது. நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு அடுத்து, நோயாளிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபடுவது செவிலியர்கள் தான்.
ஆனால், ஒரு செவிலியரின் பிறந்த நாள் அன்று தான் சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. நைட்டிங்கேல் அம்மையார் என்று பரவலாக அறியப்படும் இங்கிலாந்து நாட்டு செவிலியரின் பிறந்த நாள்தான் சர்வதேச செவலியர் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செவிலியர்களின் அம்மா என்று அழைக்கப்படும் நைட்டிங்கேல் யார்?
இங்கிலாந்து நாட்டில் உள்ள மிகவும் வசதியான குடும்பத்தில் வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் - பிரான்சிஸ் ஆகியோருக்கு மே மாதம் 12 ஆம் தேதி, 1820 ஆம் ஆண்டில் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். இவர் குடும்பத்தின் மூன்றாவது குழந்தையாகும். இன்றைய நவீனமான நர்சிங் உருவாவதற்கு காரணமானவர் நைட்டிங்கேல்தான். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல இல்லாமல், நைட்டிங்கேலுக்கு இளம் வயதிலிருந்தே செவிலியர் பணியின் மீது விருப்பம் ஏற்பட்டது.
மேலும் படிக்க... குழந்தைக்கு ரொம்ப இருமல் , சளி இருக்கா..? பனை வெல்லத்தை இப்படி கொடுத்து பாருங்க.. மருத்துவர் டிப்ஸ்..!
எனவே, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, 1844 ஆம் ஆண்டு, ஜெர்மனியில் செவிலியர் படிப்பில் சேர்ந்து, படிப்பை முடித்து, 1850-ம் ஆண்டு, லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றத் தொடங்கினார். மிகச்சிறப்பாக பணியாற்றியதால், குறைந்த காலத்திலேயே கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.
பிரிட்டிஷ் அரசு 1853 ஆம் ஆண்டு ரஷியாவிற்கு எதிராக கிரிமியன் போரில் ஈடுபட்டது. இந்த போருக்காக ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் வீரர்கள் பிளாக் ஸீக்கு அனுப்பப்பட்டனர். போரிட்ட வீரர்களில் ஆயிரக்கணக்கான வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அந்த காலகட்டத்தில் பெண்கள் செவிலியர்கள் பணியில் ஈடுபடக் கூடாது என்ற எதிர்ப்பு கிளம்பியது. இதனை கடுமையாக எதிர்த்து போராடினார் நைட்டிங்கேல். மேலும், ஒரு செவிலியர் குழுவைக் கூட்டி, படுகாயமடைந்த போர் வீரர்களுக்கு சிகிச்சை அளித்தார்.
தன்னுடைய பணியில் கைதேர்ந்த நைட்டிங்கேலின் சுகாதார நடைமுறைகள், தூய்மையின் அவசியம், முறையாக கிருமி நீக்கம் செய்வது ஆகியவை ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியது. இதற்காக, நைட்டிங்கேலுகுக்கு செஞ்சிலுவைச் சங்க விருதும் வழங்கப்பட்டது.
ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் ’தி லேடி வித் தி லாம்ப்’ அதாவது கைவிளக்கு ஏந்திய தேவதை என்றும் அழைக்கப்படுகிறார். கிரிமியன் போரின் போது, நாள் முழுவதும் கைகளில் விளக்கை ஏந்திக் கொண்டு, சிகிச்சை பெற்று வரும் போர் வீரர்களின் படுக்கைகளையே கண்காணித்த படி நடப்பார்.
மேலும் படிக்க.. சாப்பிட்ட பிறகு ஒரு துண்டு வெல்லம்... அப்புறம் பாருங்க.. இந்த பிரச்சனையே வராது..!
பின்னர், இவர் 1860 ஆம் ஆண்டு ஒரு செவிலியர் பள்ளியைத் தொடங்கினார். ‘ஆர்டர் ஆப் மெரிட்’ என்ற இங்கிலாந்தின் மிக உயரிய விருதை பெற்றார். 1910 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். நைட்டிங்கேல் இறந்த பிறகு, இவருடையப் பிறந்த நாளன்று, ஒவ்வொரு ஆண்டும் இவருடைய சேவைகளை நினைவுகூறும் விதமாக வெஸ்ட் மினிஸ்டர் அபே மாளிகையில் விளக்கு ஏற்றப்படுகிறது .
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nurse, Nurses, Nurses day