முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / விண்வெளியில் அசத்தல் ரெஸ்டாரண்ட்.. பறந்துகொண்டே உணவருந்தலாம்.. ஆனால் விலைதான் கொஞ்சம்...

விண்வெளியில் அசத்தல் ரெஸ்டாரண்ட்.. பறந்துகொண்டே உணவருந்தலாம்.. ஆனால் விலைதான் கொஞ்சம்...

வானத்தில் விருந்து

வானத்தில் விருந்து

25 கிமீ உயரத்தில் ஹீலியம் அல்லது ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட Zephalto பலூன்களில் பறந்தபடி உணவருந்தலாம்.

  • Last Updated :
  • Chennai |

தினமும் வீட்டிலேயே அமர்ந்து நான்கு சுவர்களுக்குள் உணவு அருந்தும் நமக்கு வித்தியாசமான இடத்தில், அல்லது வித்தியாசமான தீம் ரெஸ்டாரண்டுகள் போக வேண்டும் என்பது ஒரு விருப்பமாக இருக்கும். அப்படி நினைப்பவர்களுக்கு இந்த செய்தி நிச்சயம் சுவாரஸ்யமானதாக இருக்கும்.

ஏனென்றால், பிரெஞ்சு நிறுவனமான செபால்டோ (Zephalto) தனது வாடிக்கையாளர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று உணவு வழங்க ஏற்பாடு செய்து வருகின்றனர். கண்கவர் விண்வெளிக் காட்சிகள் மற்றும் உயர்தர பிரெஞ்ச் உணவுகள் , காலிக் ஒயின்கள் அனைத்தையும் வானில் அமர்ந்தபடி ரசிக்கலாம் என்றால் யாருக்கு தான் வேண்டாம் என்று சொல்லத் தோன்றும்.

ஆனால் இது இப்போது தான் உருவாக்கப்பட்டு வருகிறது. 2025 இல் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. ஆனால் டிக்கெட்டின் விலை கேட்டால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள்!

ஏற்கனவே spacex போன்ற நிறுவனங்கள் விண்வெளி சுற்றுலாவை நிகழ்த்தி வரும் நிலையின் இந்த பிரெஞ்சு நிறுவனம் ஒரு படி மேலே போய் வானத்தில் அமர்ந்து  உணவருந்த வைக்க தயாராகி வருகின்றன. பிரான்ஸ் நாட்டு பலூன் நிறுவனமான Zephalto, ஆடம்பரமான உணவுக்காக பயணிகளை பலூனில் விண்வெளியின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டு வருகின்றனர்.

இது செயல்பாட்டிற்கு வந்தால் 25 கிமீ உயரத்தில் ஹீலியம் அல்லது ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட Zephalto பலூன்களில் பறந்தபடி உணவருந்தலாம். அதற்காக செலஸ்டே என்ற பிரத்யேகமான பலூன் வகை தயாரிக்கப்பட்டு வருகிறது.இந்த பலூன் 90 நிமிடங்களுக்கு நிலையாக ஒரே இடத்தில் இருக்கும்.  அந்த நேரத்தில் விருந்தினர்கள் வனத்தில் இருந்து பூமியை ரசித்து அதோடு தங்கள் விருப்பமானவருடன் உணவருந்தலாம்.

இது உலகின் பாதுகாப்பான ஸ்ட்ராடோ பலூனாக இருக்கும். அதோடு  2 சதுர மீட்டர் (21.5 சதுர அடி) பரப்பளவைக் கொண்ட மிகப்பெரிய  இடத்தையும் கொண்டிருக்கும். அதுமட்டும் இல்லாமல் இந்நிறுவனம், 20 சதுர மீட்டரில் (215 சதுர அடி), செலஸ்டே உலகின் மிக மதிப்புமிக்க சதுர மீட்டர் பரப்பு கொண்ட  மிகப்பெரிய விண்வெளி காப்ஸ்யூலாலாய் உருவாக்கவும் முயன்று வருகிறது.

பலூனில் வானத்திற்குச் சென்று உணவருந்தும் இந்தப் பயணம் சுமார்  6 மணி நேர பயணமாகும். இங்கு உணவு மட்டுமின்றி இதர வசதிகளும் கிடைக்கின்றது. அதாவது உணவு , மதுவோடு ஸ்பேஸ் பலூன்களில் wifi வசதியும் கிடைக்குமாம். நீங்கள் செல்லும் வழியெல்லாம் போட்டோக்கள், வீடியோக்கள் எடுத்து லைவில் ஷேர் பண்ணிக்கொண்டே போகலாம்.

zephalto's space balloon will take you to the stratosphere in 2025

மேலும் இந்த பலூனை  வானில் திருமணம் செய்து கொள்ள விரும்பும் தம்பதிகளும் வித்தியாசமாக பிறந்தநாள் விழாக்களைக் கொண்டாட விரும்பும் மக்களும் கூட பயன்படுத்திக்கொள்ளுமாறு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது போன்ற நிகழ்வுகளை வானில் நடத்த பல்க் புக்கிங்களும், பெரிய பலூன் வசதிகளும் உள்ளன.

Zephalto ஆண்டுக்கு 60 விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் ஆண்டிற்கு 600 பேர் வானில் அமர்ந்தபடி வித்தியாசமான முறையில் உணவை ருசிக்கலாம். ஏற்கனவே மூன்று சோதனை விமானங்கள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன. 2025 இல் நிச்சயம் புழக்கத்திற்கு வந்துவிடும் என்று நிறுவனம் உறுதியாக கூறுகிறது.

இதையும் படிங்க : இந்தியாவின் மகிழ்ச்சியான மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மிசோரம்.. ஏன் தெரியுமா..?

top videos

    எல்லாம் சரிதான் இந்த பயணத்திற்கு எவ்வளவு டிக்கெட் காசு வசூலிப்பார்கள் என்று கேட்கிறீர்களா.. அங்கு தான் நாங்களும் வருகிறோம். ஒரு டிக்கெட்டின் விலை 'ஒரு கோடியாமாப்பா" கிட்டத்தட்ட பூமியின் வளிமண்டல விளிம்பு வரை போவது என்றல் கம்மி காசா வாங்குவார்கள். ஒரு நபருக்கு €120,000 (ரூ.1,08,08,806) முதல் இருக்கும் என்று தெரிகிறது. என்ன காசு சேர்த்து வைக்க ஆரம்பிக்கலாமா?

    First published:

    Tags: France, Restaurant, Space, Travel