முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உலகின் மிகப் பழமையான முத்து நகரம் கண்டுபிடிப்பு! - 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக தகவல்!

உலகின் மிகப் பழமையான முத்து நகரம் கண்டுபிடிப்பு! - 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக தகவல்!

முத்து நகரம்

முத்து நகரம்

இங்கு கண்டுபிடிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிலும் முத்து குளிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் இருந்துள்ளன

  • Last Updated :
  • Chennai, India

உலகில் எத்தனை விலை உயர்ந்த உலோகங்கள் இருந்தாலும் முத்துக்களுக்கு இருக்கும் தனித்துவம் வேறு எதற்கும் வராது. முத்து குளிக்கும் தொழிலை நம்பி கரையோர குடும்பங்கள் பல இன்றும் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வடக்கு ஷேக்டாம்களின் வளைகுடா  தீவில் உலகின் பழமையான முத்து நகரம் ஒன்றை கண்டுபிடித்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கச்சா எண்ணெய் வளத்தால் மட்டுமே பெரிய பொருளாதாரத்தை ஈட்டி வரும் ஐக்கிய அரபு நாடுகளில் முத்து எல்லாம் எடுக்கப்பட்டதா என்ற ஆச்சர்யம் எழும். ஆனால் உண்மையில்  காலத்தில் ஒரு வளமான முத்து நகரம் நிலைத்து இருந்துள்ளது. அதுவும் முத்தெடுக்கும் சீசனுக்கு மட்டும் இல்லாமல் ஆண்டு முழுவதும் பரபரப்பான சந்தையாக இருந்த ஒரு ஊர்தான் கண்டறியப்பட்டுள்ளது.

துபாயிலிருந்து வடகிழக்கே 50 கிமீ (30 மைல்) தொலைவில் உள்ள உம் அல்-குவைனில்(Umm al-Quwain) உள்ள கோர் அல்-பெய்டா(Khor al-Beida) சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் சினியா தீவில் (Siniyah Island)  புதையுண்ட நகரம் இப்போது உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. அந்த நகரத்தை பற்றி ஆய்வு செய்ய ஒரு குழு உருவாக்கப்பட்டது.

உம் அல்-குவைனின் சுற்றுலா மற்றும் தொல்லியல் துறை, ஐக்கிய அமீரக பல்கலைக்கழகம், எமிரேட்டில் உள்ள இத்தாலிய தொல்பொருள் நிறுவனம்  மற்றும் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் உள்ள பண்டைய உலக ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து அகழ்வாராய்ச்சியில் பங்கேற்றன. அப்போது தான் இந்த சினியா தீவில் ஒரு முத்து நகரம் இருப்பது வெளிவந்துள்ளது.

 "ஒளிரும் விளக்குகள்" என்று பொருள்படும் தீவு. அதன் சூடான வெள்ளை- சூரியனின் தாக்கம் காரணமாக இந்த பெயர் பெற்றிருக்கலாம். இந்த இடத்தில் முதலில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கிட்டத்தட்ட 1,400 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய ஒரு கிறிஸ்தவ மடாலயத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இது இன்று ஐக்கிய அரபு நாடுகளில் வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகம் அங்கு குடியேறுவதற்கு முன்பு வாழ்ந்த சமூகத்தை சேர்ந்தது  என்பது தெரியவந்துள்ளது.

இந்த நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கலைப்பொருட்கள், ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்திருக்கலாம். இது ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இஸ்லாமியத்திற்கு முந்தைய வரலாற்றைக் கொண்டுள்ளது. பழைய வரலாற்று நூல்களில் முத்து நகரங்கள் பட்டியலில் இந்த நகரம் குறிப்பிடப்பட்டிருந்தாலும் உண்மையாக அதன் நிலப்பரப்பை கண்டுபிடித்தது இதுவே முதல் முறையாகும்.

இதைப் பற்றி குறிப்பிடுகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையின் இணைப் பேராசிரியரான திமோதி பவர், இது மிகவும் குறிப்பாக கலீஜி முத்து நகரத்தின் மிகப் பழமையான உதாரணம். அதோடு  துபாய் போன்ற நகரங்களின் ஆன்மீக மூதாதையர் போல் தெரிகிறது என்றும் கூறினார். 

இந்த நகரத்தில் கடற்கரைப் பாறை மற்றும் சுண்ணாம்பு சாந்துகளால் ஆன பல்வேறு வீடுகளைக் கண்டறிந்தனர். அவை நெரிசலான பகுதிகளிலிருந்து முற்றங்களைக் கொண்ட பரந்த வீடுகள் வரை, ஒரு சமூக அடுக்கை பரிந்துரைக்கின்றன. இப்பகுதியில் பருவகால இடங்களில் நடத்தப்படும் மற்ற முத்து வேலைகளைப் போலல்லாமல், ஆண்டு முழுவதும் வாழ்வதற்கான அறிகுறிகளையும் இந்த தளம் கொண்டுள்ளது.

அதே போல இந்த நகரத்தில் முத்துக்குளித்தல் என்பது சாதாரண விஷயமாக இருந்துள்ளது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிலும் முத்து குளிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் இருந்துள்ளன. அதே போல 10,00 சிப்பிகளை எடுத்தால், அதில் ஒன்றில் தான் முத்து கிடைக்கும்.  மற்ற சிப்பிகளை குப்பையில் போடுவார்கள். அப்படி குப்பையாக தொட்டிகளில்  கொட்டப்பட்ட புதைந்த சிப்பிகளையும் கண்டுபிடித்துள்ளனர்.

இதையும் பாருங்க:  "குப்பைத் தீவு.." கழிவு மேலாண்மை சுற்றுலாதலமாக மாறிய கதை தெரியுமா?

முதலாம் உலகப் போருக்குப் பிறகு செயற்கை முத்துக்கள் அறிமுகமானதால் இயற்கை முத்துக்களின் மவுசு குறைந்தது. இதனால் ஐக்கிய எமிரேட்டில் முத்து சந்தை பெரும் மந்தநிலையை அடித்து விரைவாக சரிந்தது. ஆனால் தனித்துவமான முத்துக்களின் கதைகளில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இன்றும் குறிப்பிட்ட முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. 

top videos

    UAE யில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட எமிரேட் Umm al-Quwain, இல் ஒரு பார்வையாளர் மையத்தை உருவாக்க தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. ஐக்கிய அமீரகம் போகும் வாய்ப்பு அமைந்தால் நிச்சயம். இந்த முத்து நகரத்தை பார்த்து வாருங்கள் மக்களே. IRCTC மூலம் இங்கிருந்து துபாய்க்கு 1 லட்சம் செலவில் சென்று வரலாம்.  வாய்ப்பையும் மிஸ் செய்து விடாதீர்கள்.

    First published:

    Tags: Dubai, Travel, Travel Guide