நீண்ட தூர பயணங்களுக்கு நமது முதல் தேர்வு ரயில்களாக தான் இருக்கும். நமது பட்ஜெட்டுக்குள் வரும் கட்டணம், அலுப்பு தெரியாமல் இருக்கும் பயணம், அவ்வப்போது தூக்கம் என்று எல்லா அம்சங்களும் இதில் உண்டு. ஆனால் உலகின் மிக நீண்ட ரயில் பயணம் எத்தனை நாட்களில் முடியும் தெரியுமா?
உலகின் மிக நீண்ட ரயில் பயணம் இரண்டு அல்லது நான்கு நாட்களில் முடிந்துவிடும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். அந்த பயணத்தை முடிக்க 7 நாட்கள் 20 மணி நேரம் 25 நிமிடங்கள் ஆகும். ஆமாங்க! ரஷ்யாவின் மாஸ்கோ நகரிலிருந்து வடகொரியாவின் பியாங்யாங் (Pyongyang) நகருக்கு இடையே ஓடிய ரயிலின் பயண நேரம் இது தான்.
மாஸ்கோவில் இருந்து பியாங்யாங்கிற்கு செல்லும் பயணமே உலகின் மிக நீண்ட ரயில் பயணமாகும். டிரான்ஸ்-சைபீரியன் ரயில் ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து கிளம்பும் இந்த ரயில் வட கொரியாவின் பியாங்யாங் வரை 10,214 கிலோமீட்டர் தூரத்தை கடக்கிறது. இந்த நீண்ட பாதையில் ரயில் 16 முக்கிய ஆறுகள், 87 நகரங்கள் வழியாகச் செல்கிறது.
ஒரு வாரம் முழுவதும் பயணிக்கும் இந்த பயணம் பயணிகளின் பொறுமையை முழுமையாக சோதிக்கும் என்று நினைக்க வாய்ப்பே அளிக்காமல், அழகான இயற்கை காட்சிகளை பயணம் முழுவதும் பார்க்க வைக்கிறது.
டிரான்ஸ்-சைபீரியன் ரயில்வே 1916 இல் தொடங்கப்பட்டது. டிரான்ஸ்-சைபீரியன் இரயில்வே ரஷிய தலைநகர் மாஸ்கோவிலிருந்து ரஷ்யாவின் மற்றொரு பாதியில் உள்ள விளாடிவோஸ்டாக் வரை பயணிகளை அழைத்துச் செல்கிறது. இந்த பாதை தான் உலகின் இரண்டாவது நீளமான ரயில் பாதையாம். இந்த வழித்தடத்தில் ஓடும் ரயில் மலைகள் மற்றும் காடுகளை கடந்து செல்கிறது.
பியாங்யாங்கில் இருந்து....
உலகின் நீண்ட பயணம் எப்படி அமைகிறது என்று தெரிந்து கொள்ள ஆசையா? சொல்கிறோம். வட கொரியாவிலிருந்து ரஷ்யாவின் மாஸ்கோ, விளாடிவோஸ்டாக் ஆகிய இடங்களுக்கு வரும் பயணிகளை ஒரு ரயில் பெட்டி கொண்டு வருகிறது. இந்த ரயில் விளாடிவோஸ்டாக்கை முதலில் அடைகிறது.
பின்னர் விளாடிவோஸ்டாக்கிலிருந்து மாஸ்கோ செல்லும் உலகில் இரண்டாவது தொலைதூர ரயிலின் பின்னால் இணைக்கப்படுகிறது. சிறப்பு என்னவென்றால், பியாங்யாங்கில் இருந்து பயணிகள் ரயில் பெட்டியில் ஏறியவுடன், தங்கள் பெட்டியை எங்கும் மாற்ற வேண்டிய அவசியமில்லை. இந்த ரயில் வடகொரியாவில் இருந்து மாதம் இருமுறை ரஷ்யா செல்கிறது.
இதையும் பாருங்க: 56 நாட்கள், 22 நாடுகள்.. உலகின் மிக நீண்ட பேருந்து பயணம் பற்றி தெரியுமா..?
ரஷியாவில் இருந்து:
இதேபோல், ரஷ்யாவிலிருந்து பியாங்யாங்கிற்கு ஒரு மாதத்தில் நான்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மாஸ்கோவிலிருந்து வரும் ரயில் பியாங்யாங்கிற்குச் நேராக செல்வதில்லை. உண்மையில், இந்த ரயில் பியாங்யாங்கிற்குச் செல்லும் ரயிலின் பெட்டிகளை வட கொரியாவில் உள்ள டுமான்ஜென்(Tumangen) நிலையத்திற்குக் கொண்டு வருகிறது. இங்கிருந்து பியாங்யாங்கிற்கு செல்லும் மற்றொரு ரயிலின் பின்னால் இந்த பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Travel, Travel Guide