முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உலகின் முதல் நீருக்கடியில் உள்ள Whale Mail தபால் நிலையம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

உலகின் முதல் நீருக்கடியில் உள்ள Whale Mail தபால் நிலையம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

வனுவாட்டு தபால் அலுவலகம்

வனுவாட்டு தபால் அலுவலகம்

நீர் புகாத பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட மற்றும் சிறப்பு முத்திரையுடன் கூடிய அஞ்சல் அட்டைகள் ஒவ்வொரு நாளும் பயணிகளால் இந்த தபால் நிலைய  போடப்படுகிறது.

  • Last Updated :
  • Chennai, India

போன் மற்றும் இன்டர்நெட் வந்த பின்னர் கடிதம் எழுதும் பழக்கம் மக்களிடம் குறைந்து போய்விட்டது. ஆனால்,  இன்றும் கடிதம் போடும் மக்கள்  இருந்து வருகின்றனர். எண்ணிக்கை குருவாக இருந்தாலும் முக்கிய விஷயங்கள் இன்றும் தபால் மூலம் பரிமாறப்படுகிறது. இந்நிலையில் சில தனித்துவமான தபால் நிலையங்களும் உலகில் உள்ளன.

அளவில் பெரிய தபால் நிலையம், சிறிய தபால் நிலையம், , பெண்கள் மட்டும் பணிபுரியும் தபால் நிலையம் என்று பல தபால் நிலையங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது மட்டும் இல்லாமல் கடல் மட்டத்திலிருந்து 4,400 மீட்டர் உயரத்தில் ஹிமாச்சலப்பிரதேசத்தின் ஸ்பிட்டி பள்ளத்தாக்கில்  உள்ள ஹிக்கிம் தபால் நிலையம் உலகின் மிக உயரமான தபால் நிலையமாகக் கருதப்படுகிறது.

உலகின் உயரமான தபால் நிலையம் நம் இந்தியாவில் இருக்கிறது என்று தெரிந்துவிட்டது. அதே போல உலகின் தாழ்வான தபால் நிலையம் என்ற ஒன்றும் இருக்கும் தானே. அப்படி ஒன்றும் இருக்கிறது. நீருக்கு அடியில் இருக்கும் உலகின் முதல் தபால் நிலையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது தெரியுமா? ஆஸ்திரேலியாவில் தான்...

வடக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து 1,000 மைல் கிழக்கே அமைந்துள்ள வனுவாட்டு  கடற்கரையில் இருந்து சுமார் 160 அடி தொலைவில்,  ஹேட் அவே  தீவுப் பகுதியில் நீருக்கடியில் தான்  தனித்துவமான whale mail என்ற தபால் அலுவலகம் அமைந்துள்ளது . தென் பசிபிக் பெருங்கடலுக்குள்  மெலே விரிகுடாவின் மேற்பரப்பில் பத்து அடி ஆழத்தில் அஞ்சல் பெட்டி மற்றும்  கண்ணாடியிழை நீர் தொட்டி தபால் நிலையம் அமைந்துள்ளது.

உள்ளூர் போஸ்ட் மாஸ்டர் மற்றும் அருகே உள்ள ரிசார்ட் உரிமையாளரால் திட்டமிடப்பட்டு இது வடிவமைக்கப்பட்டது .இது 2003 ஆம் ஆண்டில் உலகின் முதல் நீருக்கடியில் உள்ள தபால் நிலையமாக திறக்கப்பட்டது. இந்த தபால்  உண்மையில் தபால்கள் உலகின் மற்ற இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

"ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கான அஞ்சல் அட்டைகள் நீருக்கடியில் தபால் அலுவலகத்தில் சமர்பிக்கப்படுகின்றன. இங்கிருந்து தபால்  பல பயணிக் கப்பல்கள் துறைமுகத்திற்கு வரும்  எண்ணிக்கை அதிகரிக்கிறது." என்று இந்த தபால் நிலையத்தின் அலுவலர் கூறுகிறார்.

ஒவ்வொரு நாளும் பயணிகள் இங்குள்ள அஞ்சலகத்தில் நீர் புகாத பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட மற்றும் சிறப்பு முத்திரையுடன் கூடிய அஞ்சல் அட்டைகளை அனுப்பி செல்கின்றனர். இந்த தனித்துவ தபால் அட்டைகள் கடற்கரைக்கு அருகிலேயே விற்கப்படுகிறது. அதை ஸ்நோர்க்லிங் மூலம் நீருள் மூழ்கி பயணிகள் தபால் பெட்டியில் போட்டுவிடுகின்றனர்.

தினமும் சரியாக மாலை 3 மணிக்கு இந்த கடிதங்கள்  சேகரிக்கப்படுவதை உறுதி செய்கின்றனர். இதற்காக அஞ்சல் அலுவலகம் ஒரு சிறப்பு உலோக சாதனத்தை உருவாக்கியது, இது ஒவ்வொரு அஞ்சலட்டையிலும் மை பயன்படுத்தாமல் குறியீடு போடும். அதை எடுத்து உலகின் மற்ற இடங்களுக்கு அதை அனுப்புகின்றனர்.

இதையும் பாருங்க: வித விதமான மனித மூளைகள்.. மூளை அருங்காட்சியகம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஒரு கொடி மேற்பரப்பில் பறக்கும்போது தபால் அலுவலகம் வணிகத்திற்காக திறந்திருக்கும் என்பதை பார்வையாளர்கள் அறிந்துகொள்ளலாம்.  ஒரு காலத்தில், உள்ளூர் தபால் சேவையானது அதன் அஞ்சல் எழுத்தர்களுக்கு ஸ்கூபா டைவ் பயிற்சி அளித்தது, ஆனால் காலப்போக்கில் இந்த கூடுதல் சிறப்புப் பயிற்சியை பராமரிப்பது கடினமாகிவிட்டது, அதனால்தான் டைவ் மாஸ்டர்கள் இப்போது அவர்களுக்கு உதவியாளர்களாக இருக்கிறார்கள்.

First published:

Tags: Australia, Post Office, Travel Guide