முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சொந்த வாகனத்தில் வெளிநாடு செல்ல வேண்டுமா..? அப்போ இதெல்லாம் ரெடி பண்ணி வச்சுக்கோங்க

சொந்த வாகனத்தில் வெளிநாடு செல்ல வேண்டுமா..? அப்போ இதெல்லாம் ரெடி பண்ணி வச்சுக்கோங்க

சொந்த வாகனத்தில் வெளிநாடு செல்ல வேண்டுமா..? அப்போ இதெல்லாம் ரெடி பண்ணி வச்சுக்கோங்க

சொந்த வாகனத்தில் வெளிநாடு செல்ல வேண்டுமா..? அப்போ இதெல்லாம் ரெடி பண்ணி வச்சுக்கோங்க

பயணிக்கும் வாகனத்தின் சந்தை மதிப்பில் 200 சதவீதம் வைப்புத் தொகையாக வைக்கப்பட வேண்டும்.

  • Last Updated :
  • Chennai, India

பெரும்பாலும் இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு விமானத்தில் செல்வது வழக்கம். ஆனால் இன்று பலர் தங்கள் சொந்த வாகனத்தில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல விரும்புகிறார்கள். உங்கள் சொந்த வாகனத்தில் சர்வதேச அளவில் பயணம் செய்ய விரும்பினால் அதற்கான சில நடைமுறைகளை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். அந்த  நடைமுறைகளை நாங்கள் உங்களுக்கு இப்போது சொல்கிறோம்..

ஒருவர் தனது சொந்த வாகனத்தில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல விரும்பினால், பல அனுமதிகள் தேவை. ஒருவரிடம் பாஸ்போர்ட் இருப்பது போல் வாகனத்திலும் பாஸ்போர்ட் உள்ளது. இந்த பாஸ்போர்ட் கார்னெட் டி பாசேஜ்(Carnet de Passage) என்று அழைக்கப்படுகிறது. கார்னெட் டி பாஸேஜ் என்பது, சுங்க வரிகள் இல்லாமல் சர்வதேச எல்லைகளில் வாகனங்கள் அல்லது குறிப்பிடத்தக்க மதிப்புள்ள பிற சொத்துக்களை தற்காலிகமாக இறக்குமதி செய்ய உதவும் ஒரு ஆவணமாகும். 

புறப்படும்போது, ​​வாகனம் அல்லது சொத்தை உரிமையாளர் மீண்டும் நாட்டிற்கு வெளியே எடுத்துச் செல்வார். அப்படி எடுத்துச் செல்லாவிடில்  அதிக அபராதம் விதிக்கலாம் என்று உறுதியளிப்பது தான் இந்த படிவம். கார்னெட் டி பாசேஜஸ் பொதுவாக ஒரு வாகனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. தொழில்முறை இசைக்கலைஞர்கள் அல்லது புகைப்படக் கலைஞர்கள் நிறைய உபகரணங்களுடன் பயணிக்கும் போது இது தேவைப்படலாம். வர்த்தக கண்காட்சியில் காட்சிப்படுத்தும்  பொருட்களுக்கும் இது தேவை. 

நம் நாட்டில், இந்திய ஆட்டோமொபைல் சங்கத்தின் கூட்டமைப்பு (Federation of Indian Automobile Association)இதுபோன்ற பயணங்களுக்கு அனுமதி அளிக்கிறது. சில நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். அதே போல ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு குழு இருக்கும். அந்த நாட்டின் லோக்கல் மோட்டார் கிளப்பிடம் இருந்து அனுமதி பெட்ரா பின்னர் தான் வாகனத்தை உள்ளே எடுத்துச்செல்ல முடியும்.

ஒவ்வொரு நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை நம் சொந்த வாகனத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். அதற்கு சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அந்த நாட்டில் அதிகாரபூர்வ அனுமதி அளிக்கும் இணையதளத்தில் பயணிப்பவர், வாகனம் தொடர்பான அனைத்து தகவல்களையும் உள்ளிட வேண்டும். அதோடு அவர்கள் பயணிக்கும் நாடுகள், இறுதியாக சேரும் இடம் பற்றிய தகவல்களை கொடுக்க வேண்டும்.

இப்படி சொந்த வாகனத்தில் பயணிகளிடம் எப்போது தங்களது பாஸ்போர்ட், அதுவும் அவர்கள் கடந்து செல்லும் நாடுகளுக்கான விசாக்களை அச்சிட குறைந்தது 20 பக்கங்கள் கொண்டவையாக இருக்க வேண்டும், அவர்கள் கடந்து செல்லும் அனைத்து நாடுகளுக்கும் செல்லுபடியாகும் சர்வதேச ஓட்டுநர் உரிமம், காப்பீடு போன்றவை இருக்க வேண்டும். 

இவை அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு பயணச்சீட்டு வழங்கப்படும். பயணிக்கும் வாகனத்தின் சந்தை மதிப்பில் 200 சதவீதம் வைப்புத் தொகையாக வைக்கப்பட வேண்டும். இந்த வைப்புத்தொகையை வங்கி வரைவோலையாகவோ, காசோலையாகவோ அல்லது வங்கி உத்தரவாதமாகவோ செலுத்தலாம்.

அது மட்டும் அல்லாமல் சர்வதேச ஓட்டுநர் உரிமம் எடுப்பதையும் மறந்து விடாதீர்கள். ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற ஒரு சில நாடுகளில் மட்டும் இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்தே  முடியும்.  சர்வதேச ஓட்டுநர் உரிமம் தேவை. 

இதையும் பாருங்க: ரயில் டிக்கெட் முன்பதிவில் எத்தனை வகையான வெயிட்டிங் லிஸ்ட் இருக்கு தெரியுமா..?

அதே போல சோர்ந்த வாகனத்தில் வெளிநாட்டு பயணத்திற்கு அனுமதிக்கும் கார்னெட் டி பாசேஜ் வழங்கப்பட்டு ஒரு வருடம் வரை செல்லுபடியாகும். அதற்கும் உங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம். இந்தியாவை சுற்றியுள்ள வாகனத்தில் போகக்கூடிய  நாடுகளை பார்த்தால்,  நேபால், மியான்மார், பாகிஸ்தான் நாடுகளுக்கு கார்னெட் டி பாசேஜ் கட்டாயம் வாங்க வேண்டும். பங்களாதேஷ், சீனா , பூட்டான் நாடுகளுக்கு தேவையில்லை.

First published:

Tags: Travel, Travel Guide