முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இந்தியாவின் தென்கோடி முனையை எது தெரியுமா..? அங்கே என்னென்ன பார்க்கலாம்..?

இந்தியாவின் தென்கோடி முனையை எது தெரியுமா..? அங்கே என்னென்ன பார்க்கலாம்..?

இந்திரா புள்ளி

இந்திரா புள்ளி

2004 இல் ஏற்பட்ட சுனாமியின் போது இந்திரா பாயிண்ட்டின் தென்பகுதி கடலுக்குள் மூழ்கியது.

  • Last Updated :
  • Andaman & Nicobar Islands, India

இந்தியாவின் தென்கோடி முனை எப்படி இருக்கும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? முதலில் இந்தியாவின் தென்கோடி முனை எது என்பதை சரியாக தெரிந்து வைத்திருக்கிறீர்களா? இந்தியாவின் தென் முனை கன்னியாகுமரி என்று நினைத்திருந்தால் அது தவறான விடை. கன்னியகுமாரியைத் தாண்டியும் இந்தியா விரிந்துள்ளது. அதை பற்றி இந்தத்  தொகுப்பில் சொல்கிறோம்.

இந்திய நிலப்பரப்பு என்பது காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை குஜராத் முதல் அருணாச்சல பிரதேசம் வரை உள்ள பிரதான நிலப்பரப்பை மட்டும் குறிக்காது. இதைத் தாண்டி வங்கக்கடலில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டம், அரபிக்கடலில் உள்ள லக்ஷத்தீவுகள் எல்லாம் இந்திய நிலப்பரப்பில் தான் சேரும். எனவே கன்னியாகுமரியை தாண்டி கடலில் உள்ள தீவுகளை கூகுள் மேப்பில் ஜூம் பண்ணித் தேடி பாருங்கள்.

அந்தமான் தீவு கூட்டத்தில் கிரேட் நிக்கோபார் தீவின் கீழே இந்திரா பாயிண்ட் என்ற இடத்தில் போய் நிற்கும். 6.7806° N, 93.8259° E என்ற புவியியல் புள்ளியில் அமைந்துள்ள இந்த இடம் முன்பு பிக்மேலியன் புள்ளி மற்றும் பார்சன் புள்ளி (Pygmalion Point and Parson Point.)என்று அறியப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக 1980 களின் நடுப்பகுதியில் இது பெயர் மாற்றப்பட்டது.

கிரேட் நிக்கோபார் தீவுக்கூட்டத்தின் அழகிய மழைக்காடுகளுக்குள் அமைந்திருக்கும் இந்திரா பாயிண்ட் கேம்ப்பெல் விரிகுடாவில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள மிகவும் மர்மமான இடங்களில் கேம்ப்பெல் விரிகுடாவும் ஒன்று என்று கூறப்படுகிறது. இருப்பினும், கிரேட் நிக்கோபாரில் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட திறந்திருக்கும் மிகச் சில இடங்களில் இதுவும் ஒன்று.

இந்திரா பாயிண்டில்  ஒரு குருத்வாரா இருப்பதால் இது ஒரு  "மினி பஞ்சாப்" என்றும் அழைக்கப்படுகிறது. ஒருபுறம் தண்ணீராலும் மறுபுறம் காடுகளாலும் சூழப்பட்ட இந்திரா பாயிண்ட் கடற்கரையில் கம்பீரமான ஒரு கலங்கரை விளக்கம் உள்ளது.  உலகின் மிக அற்புதமான கலங்கரை விளக்கங்களில் இதுவும் ஒன்றாகும்! சூரிய அஸ்தமனத்தின் போது இந்த இடத்திற்குச் செல்வது சிறந்தது

கலங்கரை விளக்கம் தாண்டி இங்கு பிரமிக்க வைக்கும் சதுப்புநிலங்கள் மற்றும் இலையுதிர் மரங்கள் நிறைந்த காடுகளையும் நீங்கள் ஆராயலாம். இந்த இடம் சில தனித்துவமான தாவரங்கள் மற்றும் விலங்குகளை கொண்டுள்ளது. நண்டு உண்ணும் மக்காக், ராட்சத ராபர் நண்டு(giant robber crab), ராட்சத தோல் முதுகு ஆமை(giant leather back turtle) மற்றும் வலையுடல்  மலைப்பாம்பு(reticulated python), நிக்கோபார் கழுகு (Nicobar serpent eagle) மற்றும் உப்பு நீர் முதலை போன்றவற்றை இந்திரா பாயின்ட்டில் அவற்றின் இயற்கையான வாழ்விடத்தில் காணலாம்.

விரிந்து கிடக்கும் இந்த இடம் முதலில் கொஞ்சம் அதிகமாக இருந்தது. 2004 இல் ஏற்பட்ட சுனாமியின் போது இந்திரா பாயிண்ட்டின் தென்பகுதி கடலுக்குள் மூழ்கியது. இதனால் இந்தியாவின் தென்முனையின் 4.25 மீட்டர் தண்ணீரில் தணிந்தது. இருப்பினும் இந்த இடம் தனது அழகை தக்கவைத்துக்கொண்டு தான் இருக்கிறது.

இதையும் படிங்க : இந்தியாவின் முதல் கேபிள் ரயில் பாலம்..! எங்கு இருக்கு தெரியுமா..?

மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இலங்கையின் தலைமன்னார் தீவு இந்திரா முனையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் இந்த எல்லையை கடக்க உங்களிடம் பாஸ்போர்ட் இருப்பது அவசியம்.

இந்திரா பாயிண்ட்டை எப்படி அடைவது?

பெரிதாக யாருக்கும் தெரியாத இந்த இடத்தை அடைய இரண்டு போக்குவரத்துக்கு வழிகள் தான் உள்ளது.

விமானம் மூலம் - இந்திரா புள்ளியை அடைய மிக விரைவான மற்றும் எளிதான வழி விமானம் ஆப்பிளும். சென்னை மற்றும் கொல்கத்தாவில் இருந்து போர்ட் பிளேரில் உள்ள வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி, தீவுகளுக்கு இடையேயான பயணத்திற்கு பவன்ஹான்ஸை (முதன்மை தேசிய ஹெலிகாப்டர்) தேர்வு செய்யவும். விலைகள் அவ்வப்போது மாறுபடும்.

top videos

    சாலை வழியாக- காம்ப்பெல் பேயின் ஜீரோ பாயிண்டுடன் இந்திரா பாயின்ட்டை இணைக்க சாலை இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அனால் இந்த சாலை வழி நீண்ட நேரம் எடுக்கும்.

    First published:

    Tags: Andaman And Nicobar Islands S33p01, Travel, Travel Guide