முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பல புவிசார் குறியீடுகள், வரலாற்றுத்தலங்கள் நிறைந்த மத்தியப் பிரதேசத்தின் ஒற்றை நகரம்..!

பல புவிசார் குறியீடுகள், வரலாற்றுத்தலங்கள் நிறைந்த மத்தியப் பிரதேசத்தின் ஒற்றை நகரம்..!

சந்தேரி சுற்றுலா

சந்தேரி சுற்றுலா

சேலை நெசவு மட்டுமின்றி, எம்பிராய்டரி, ஜரி வேலைப்பாடு மற்றும் பிளாக் பிரிண்டிங் போன்ற பாரம்பரிய கைவினைப் பொருட்களுக்கும் சந்தேரி பெயர் பெற்றது.

  • Last Updated :
  • Madhya Pradesh, India

மத்தியப் பிரதேசம் மாநிலத்தைப் பொறுத்தவரை, பல முக்கிய சுற்றுலாத்தலங்கள் சங்கமம் என்றே அதை சொல்லலாம். நாட்டின் மதியின் இருக்கும் மத்திய பிரதேசம் இயற்கை சார்ந்த பல முக்கியத்துவங்களைக் கொண்டுள்ளது. மாநிலத்தின் தேசிய பூங்காக்கள், கஜுராஹோ போன்ற பிரபலமான கோவிலைகளை பற்றி எல்லாம் பார்த்திருப்போம். ஆனால் ஒரு முக்கிய நகரத்தை பற்றி தெரியாமலே உள்ளது. அதை தான் சொல்ல இருக்கிறோம்.

மத்தியபிரதேசத்தில் இருக்கும் அசோக்நகர் மாவட்டத்தில் தான் நங்கள் சொல்லப்போகும் நகரம் உள்ளது. சந்தேரி என்ற இந்த நகரம் உள்ளூர் வாசிகளுக்கு பழக்கப்பட்ட இடம் என்றாலும், வெளியில் இருந்து செல்பவர்களுக்கு இந்த அக்கிரமத்தைப் பற்றி அதிகம் தெரியாது. மறைவான இடத்தில் இருக்கும் ரத்தினம் போன்ற இடம் தான் சந்தேரி நகரம்.

இந்த நகரம் தனித்துவமான பொருட்களுக்கு வழங்கப்படும் புவிசார் குறியீடு -GI வழங்கப்பட்ட பொருளை உற்பத்தி செய்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதுமட்டும் இல்லாமல் பல முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

சந்தேரி  கையால் நெய்யப்பட்ட பட்டு மற்றும் பருத்தி துணிகளுக்கு பெயர் பெற்றது, இது நாடு முழுவதும் பிரபலமானது. சாந்தேரி புடவைகளுக்கு GI (புவியியல் குறியீடு) குறிக்கப்பட்டுள்ளன. சாந்தேரி புடவை என்பது பாரம்பரிய கைவினைப் புடவையாகும், இது சாந்தேரி பகுதியில் மட்டுமே பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

இந்த புடவைகளை சந்தேரி சேலை என்ற பெயரில் மட்டுமே விற்க முடியும் என்பதை ஜிஐ டேக் உறுதி செய்கிறது. இது சாந்தேரி புடவையின் தனித்துவமான அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க உதவுகிறது, மேலும் பாரம்பரிய கைவினைப்பொருளின் அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பிற்கான சட்ட கட்டமைப்பை வழங்குகிறது.

சேலை நெசவு மட்டுமின்றி, எம்பிராய்டரி, ஜரி வேலைப்பாடு மற்றும் பிளாக் பிரிண்டிங் போன்ற பாரம்பரிய கைவினைப் பொருட்களுக்கும் சந்தேரி பெயர் பெற்றது. இந்த பொருட்கள்   உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுகிறது. தலைமுறை தலைமுறையாக இந்த நெசவு , தையல் சார்ந்தத் தொழிலை செய்து வருகின்றனர்.

பாரம்பரிய பாரம்பரிய கைவினைப்பொருட்கள் தவிர, சந்தேரி அதன் வரலாற்று நினைவுச்சின்னங்களுக்காகவும் அறியப்படுகிறது. உதாரணமாக, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சந்தேரி கோட்டை, 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது பண்டேலா ராஜபுத்திரர்களால் கட்டப்பட்டது.

நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஜமா மஸ்ஜித், இந்து மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலை பாணிகளின் தனித்துவமான கலவைக்காக அறியப்படுகிறது. மேலும் இது இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதேபோல், கோஷாக் மஹால்- சுல்தான் கியாஸ்-உத்-தின் கில்ஜியின் அரண்மனை மற்றும் ஷெஹ்சாதி கா ரோசா -ஷாஜகானின் மகளின் கல்லறை போன்ற நினைவுச்சின்னங்கள் இந்த நகரத்தில் உள்ளன.

இதையும் பாருங்க: மக்கள் தங்குவதற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கும் அரசு.. எந்தெந்த இடங்கள் தெரியுமா?

எப்படி அடைவது?

top videos

    சந்தேரிக்கு அருகிலுள்ள விமான நிலையம் குவாலியரில் உள்ளது.  சுமார் 212 கிமீ தொலைவில் உள்ள இந்த விமான நிலையத்தில் இருந்து பேருந்து அல்லது வாடகை வண்டி மூலம் சந்தேரியை அடையாளம். சந்தேரிக்கு அருகிலுள்ள ரயில் நிலையம் 40 கிமீ தொலைவில் உள்ள லலித்பூர் ஆகும். அது மட்டும் அல்லாமல்  ஜான்சி அல்லது குணா ரயில் நிலையங்களும் அருகிலேயே இருக்கின்றன.

    First published:

    Tags: Madhya pradesh, Travel, Travel Guide