பர்மா , ரங்கூன் என்று எல்லாம் வரலாற்றின் பக்கங்களில் நாம் பார்த்த ஒரு இடம் தான் மியான்மார். இந்தியாவின் மணிப்பூர், மிஸ்ர, நாகலாந்து, அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களோடு சர்வதேச எல்லையை பகிர்ந்து கொண்ட இந்த நாட்டிற்கு சாலை பயணங்கள் செய்வது எளிது . வடகிழக்கு இந்திய மாநிலங்களில் இருந்து பாஸ்போர்ட் உதவியுடன் எளிதாக பர்மா எல்லைக்குள் நுழையலாம்.
உலகளவில் மிகவும் பிரபலமான பயண இடங்களில் ஒன்றாக இல்லாவிட்டாலும், மியான்மர் நிச்சயமாக மிகவும் மாயாஜால நாடுகளில் ஒன்றாகும். இங்குள்ள இயற்கை எழிலும், கட்டிட அமைப்புகளும், புத்த மாடாலயங்களும் நிச்சயம் பார்க்கவேண்டிய இடங்களாக இருக்கின்றன. மியான்மருக்கு பயணம் செய்யும்போது, பாகன்(bagan) மற்றும் மாண்டலே(Mandalay) போன்ற இடங்கள் பயண பட்டியலில் இருக்கும். ஆனால் முக்கிய சுற்றுலா மையங்களிலிருந்து வெகு தொலைவில் நியாங் ஓஹாக் போன்ற இடங்களை பற்றி பெரும்பாலான மக்களுக்கு தெரியாது.
கலாச்சாரம், வரலாறு, கட்டிடக்கலை, சார்ந்த சுற்றுலாக்களில் ஆர்வம் கொள்பவர்களுக்கு நிச்சயம் இந்த இடம் வரப்பிரசாதமாக இருக்கும். மியான்மரில் உள்ள இன்லே(Inle ) ஏரிக்கு அடுத்தபடியாக, அமைந்துள்ள ஒரு விசித்திரக் பகுதியை பற்றி தெரிந்துகொள்ள நீங்கள் தயார் என்று நினைக்கிறோம். சரி அதில் என்ன தான் சிறப்பு என்று பார்ப்போம்.
இந்த இடத்தை அடைவது கொஞ்சம் கடினமாக இருந்தாலும், சுவாரசியமாக இருக்கும். அமைதியான ஏரி நீரில் சுமார் ஒரு மணி நேரம் படகில் பயணம் செய்த பிறகு, பார்வையாளர்கள் அமைதியான சிறிய கிராமமான இண்டெய்ன் (Indein) வழியாக நடக்க வேண்டும். துணி துவைக்கும் பெண்கள், இடிபாடுகளைச் சுற்றி ஓடும் குழந்தைகள் மற்றும் நினைவுப் பொருட்களை விற்கும் அனைத்து வயது வியாபாரிகள் சூழ்ந்த அமைதியான சூழ்நிலையுடன் கூடிய கிராமம் உங்களை தனது தனித்துவ அழகால் வரவேற்கும்.
கிராமத்திற்குள் நுழைந்து சிறிது தூரம் பயணித்தால், இடிபாடுகளாக நிற்கும் பழைய கோயில்களை காண முடியும். அதன் அருகே சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள உள்ளூர் மிதக்கும் சந்தையை காணலாம். அதோடு இந்த இடத்தில் வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட புதுப்பிக்கப்பட்ட கோவில்கள் சிலவும் உள்ளன. புதிய மற்றும் பழைய கோவில்கல் கலந்த இந்த இடம் தான் நாம் ஆராய இருப்பது.
இடிபாடுகள் என்ன போய் பார்ப்பது என்ன சுவாரசியம் இருந்துவிட போகிறது என்று நினைப்பீர்கள். புரிகிறது. ஆனால் பாகோ நகரில் இருந்து வெறும் 10 கி.மீ தொலைவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நியாங் ஓஹாக்கில்(Nyaung Ohak) 1000 க்கும் மேற்பட்ட பழங்கால இடிபாடுகள் மற்றும் பகோடாக்கள் சேர்ந்து இருக்கும் ஒரு இடமாக இருப்பும். பொதுவாக 10 - 20 பகோடாக்கள் சேர்ந்து இருக்கும். ஆனால் ஆயிர கணக்கில் ஒருங்கே பார்க்கும் இடம் இது தான்.
இந்த வளாகம் 9 மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தென்கிழக்கு ஆசியாவில் ஒரு முக்கியமான அரசியல் மற்றும் கலாச்சார மையமாக இருந்த மோன் இராச்சியத்திற்கு முந்தையதாக நம்பப்படுகிறது.ஒவ்வொரு கோயிலும் புத்தரின் பல்வேறு பிரதிநிதித்துவங்கள், அந்தக் காலத்தின் கலாச்சாரத்தையும், அன்றைய மக்களின் கலைத் திறன்களையும் பிரதிபலிக்கின்றன.
நியாங் ஓஹாக்கில் உள்ள வரலாற்று இடிபாடுகள் மோன் கட்டிடக்கலையில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளை இன்றும் பிரதிபலிக்கின்றன. அதோடு, ஆசியாவில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க இராச்சியங்களில் ஒன்றாக விலங்கிய மோன் இராஜ்யத்தின் வரலாறுகளை அடக்கிய சான்றுகள் பலவற்றை இந்த கோயில் கட்டமைப்புகளில் காணலாம். அதே போல அந்த நாட்டில் மதத் தலங்களின் பெரிய வலையமைப்பின் ஒரு முக்கிய பகுதியாக இது இருந்து வருகிறது.
இதையும் படிங்க: நியூயார்க்கில் தொடங்கப்பட்டுள்ள கஞ்சா அருங்காட்சியகம்.. அப்படி என்ன சிறப்பு..?
செங்கல் மற்றும் ஸ்டக்கோ கட்டுமானம், அலங்கரிக்கப்பட்ட செதுக்கல்கள் என்று சிறந்த அமைப்புகளோடு இருக்கும் இந்தக் கட்டிடம், காலப்போக்கில், போர், இயற்கைப் பேரிடர், புறக்கணிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டு சீரழிந்து போயின. இப்போது இது பிரபலமான இடைபாட்டு வரலாற்று தலங்கள் ஒன்றாக இருந்து வருகிறது.
நீங்கள் கலாச்சார வரலாற்றின் ரசிகராக இருந்தால், நீங்கள் ஆராய வேண்டிய இடம் இது. மேலும், நம்பினாலும் நம்பாவிட்டாலும், இடிபாடுகள் உங்கள் பயணப் புகைப்படங்களுக்கு நம்பமுடியாத தனித்துவமான பின்னணியைக் கொடுக்கின்றன!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Myanmar, Solo Travel, Travel, Travel Guide